காரணம் என்ன தெரியுமா? முதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு.

0
310

காரணம் என்ன தெரியுமா? முதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு.

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இந்த வருடம் வைரலாக அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. மேலும், இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் நேர்கொண்டபார்வை படத்தில் தல அஜித் அவர்கள் வழக்கறிஞர் பரத் சுப்பிரமணியம் என்ற கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருந்தார்.

அவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது என்றும் சொல்லலாம். மேலும்,நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் நேர்கொண்டபார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து மற்றொரு படம் உருவாகி வருகிற தகவலும் வெளிவந்தது. மேலும், இந்த புதிய படத்திற்கு அதாவது தல 60 படத்திற்கு ‘வலிமை’ என்ற பெயரையை வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள் படக்குழுவினர். மேலும், இந்த வலிமை படத்திற்கான பூஜைகளும் கடந்த அக்டோபர் மாதமே போடப்பட்டது.

பின் படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு எனக் கூறி வந்தார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். செம்பருத்தி ஷபானா சொன்ன தகவல். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் டெல்லியில் தொடங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், தற்போது வரை அந்த படத்தின் படப்பிடிப்புகள் எதுவுமே தொடங்கவில்லை.

இதுமட்டுமில்லாமல் படத்தின் அப்டேட்கள் எதுவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகவும் இல்லை என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், படப்பிடிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டு பட குழுவினரை டார்ச்சல் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் கூறியது, வலிமை படப்பிடிப்பு கால தாமதம் ஆனது உண்மை தான். இந்தப்படத்தில் அஜித் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்காக அஜித் தயார் செய்து வருகிறார். இந்நிலையில் கதாபாத்திரமாக அஜீத் தன்னை தயார் செய்து கொண்ட பிறகு தான் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர்.

இப்படி தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருந்து வந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் கதாபாத்திரத்துக்காக அஜித் அவர்கள் இப்படி இத்தனை மாதங்களாக தன்னை உருக்கி நடிக்கிறார் என்றும் அப்ப அவருடைய கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். மேலும், இந்த கதாபாத்திரம் ரசிகர்களை முழு திருப்திபடுத்தும் விதமாகவும் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தல அஜித் அவர்கள் வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், இந்த மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர்.’விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம், நேர்கொண்ட பார்வை’ போன்ற பல படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டலில் நடித்த நம்ம தல அஜித் அவர்கள் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: