இலங்கையில் அரசுக்கு யார் தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையூடாக அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து முக்கிய பேச்சு நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: