கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை இறந்து பிறக்குமா? வேறு எப்படி படுக்கவேண்டும்? பகிருங்கள்!

0
4275

கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை இறந்து பிறக்குமா? வேறு எப்படி படுக்கவேண்டும்? பகிருங்கள்!

பெண்களுக்கு கர்ப்ப காலம் தொடங்கி விட்டாலே சேயுடன் சேர்ந்து தினசரி தாங்கள் செய்யும் நடவடிக்கைகளிலும் மிகுந்த கவனம் வேண்டும். கர்ப்ப காலத்தில் மல்லாக்க மற்றும் குப்புற படுத்து உறங்குவது என்பது முற்றிலும் தவறான விஷயம்.இப்படி மல்லாக்க படுத்து உறங்குவது சில சமயங்களில் கருச்சிதைவை கூட ஏற்படுத்தக் கூடும். மேலும் குழந்தை குறை மாதத்திலேயே இறக்கக் கூட நேரிடலாம்.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயாலஜி குறித்து பிரிட்டன் இதழில் வெளியிடப்பட்ட தகவல் படி கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மல்லாக்க படுத்து உறங்குவது 28 வாரத்திற்குள் 2.3 மடங்கு அபாயத்தை விளைவிக்கிறது என்று கூறுகிறார். இப்படி தாய்மார்கள் மல்லாக்க படுக்கின்ற சமயத்தில் குழந்தையின் மொத்த எடை இரத்த குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் மல்லாக்க படுக்கும் போது குழந்தைக்கு போதுமான இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதில்லை. இதை கண்டிப்பாக தாய்மார்கள் புரிந்து கொள்வதோடு கவனமாக செயல்பட வேண்டும் என்று அலெக்சாண்டர் Heazell, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ஒரு பிபிசி சேனல் பேட்டியில் கூறியுள்ளார். எனவே தூங்க போற நிலை மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.

இந்த ஆராய்ச்சி குறித்து கிட்டத்தட்ட 1000 தாய்மார்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் தூங்கும் நிலையை பகிர்ந்து கொண்டனர். இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் மல்லாக்க படுக்கும் தாய்மார்கள் மற்ற தாய்மார்களை காட்டிலும் இரு மடங்கு குழந்தை பிறப்பு அபாயத்தை கொண்டுள்ளனர். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது புறமாக ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பிரசவம் முடியும் வரை தாய்மார்கள் குறைந்த மற்றும் நீண்ட தூக்கத்தை பெறுகின்றனர். எப்பொழுதும் பாத்ரூமிலேயே இருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் அவர்களின் தூக்கம் இரவிலும் பகலிலும் கெடுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களின் ஆண்மை குறைவிற்கு விந்தணு நீந்து சக்தி ஒரு காரணமா!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 07.02.2019 வியாழக்கிழமை !