மூன்றே நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? அப்ப இத செய்யுங்க.

0
2658

வெயில் அதிகம் என்பதால், பலருக்கும் முகத்தில் பருக்கள் வந்து, அசிங்கமாக கருமையான புள்ளிகளாக இருக்கும். இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க ஏராளமான வழிகள் உள்ளது. அதில் மிகவும் சிறப்பான ஓர் வழி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கலாம். சரி, இப்போது மூன்றே நாட்களில் கரும்புள்ளிகளை மறைய செய்யும் அந்த வழி என்னவென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு

1 மாதுளை விதைகள்

1/2 பௌல் எலுமிச்சை

1/2 ஐஸ் ட்ரே – 1

செய்முறை 1 முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் தோலை சீவி அகற்ற வேண்டும். பின் அதை துருவிக் கொள்ளவும்.

செய்முறை 2 பின் மிக்ஸியில் உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 3 பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலக்கவும்.

செய்முறை 4 அடுத்து ஐஸ் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.

செய்முறை 5 பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும்.

இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.
மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.

இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளோம். இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா பேஸ்ட்.
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

வாழைப்பழம் மற்றும் பால்.
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டர்.
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல்.
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

சூரியகாந்தி விதை.
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

மாம்பழத் தோல்.
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

தேன்.
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக்

சர்க்கரை.
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் தண்ணீர்.
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

தண்ணீர் குடிக்கவும்.
முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.

நன்கு தூங்கவும்.
தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: