கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம், ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள்.ஆனால், உண்மையில் கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தைவிட, கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம்!
வாழைப்பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களால், இயற்கையான முறையில் தேவையான அளவு செரோடோனின் சுரக்க வைக்க முடியாது.
கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் உண்பதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு, மன அழுத்தம் குறையவும் உதவுகிறது.
உடற்சக்தி!
எல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது. ஆனால், வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது.
இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கிறது. மேலும், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது.
மூளை நலன்!
தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால், மூளைக்கு தேவையான அளவு சக்தி கிடைக்க பெறுகிறது.இதில் இருக்கும் அதிகளவிலான பொட்டாசியம் நியூரல் செயல்திறனை, செல்லுலார் செயல்பாட்டினை சீராக்குகிறது.
காபி வேண்டாம்!
இடைவேளையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக ஒரு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடலாம். இது, உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
இரத்த அழுத்தம்!
தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்த இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய நலனை மேம்படுத்த உதவுகிறது.
இரத்தமும், எலும்பும்!
இதில் இருக்கும் உயந்த அளவிலான வைட்டமின் மற்றும் கனிம சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனை ஊக்குவிக்கிறது. மேலும், இரத்த சுழற்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது.
கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பின் அடர்த்தியை சீராக்குகிறது. மேலும், இரத்த சோகை மற்றும் குறைந்த வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை உண்டாகாமல் காக்கிறது.
நோய் எதிர்ப்பு!
வாழைப்பழத்தில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து, இதய நோய், புற்றுநோய் மற்றும் தசை கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது