கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவம்! கார் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்!

0
243

மும்பையில் கார் மோதியும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பையின் காட்கோபாரில் (Ghatkopar) உள்ள காமராஜ் நகரில் சக சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சாலையில் அமர்ந்து தனது ஷூவின் முடிச்சை சரி செய்வதும், அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை எடுத்துச் செல்லும் ஒரு பெண் சிறுவனைக் கவனிக்காமல் அவன் மீது காரை மோதிவிட்டுச் செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிறுவன் உயிரிழந்திருக்கக் கூடும் என பதைதைப்பு ஏற்பட்ட நேரத்தில் கார் சக்கரங்களின் இடைவெளியில் சிக்கியதால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். பின் எதுவுமே நேராதது போல எழுந்து ஓடிச் சென்று மீண்டும் விளையாடுகின்றான்.

சிலவிநாடி நேரத்தில் நேர்ந்து விட்ட இந்தச் சம்பவம் உடன் விளையாடிய சக சிறுவர்களுக்கோ, அல்லது காரில் சென்ற பெண்ணுக்கோ தெரியவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: