கணவர் இறந்த 3 நாளில் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

0
341

சென்னை மடிப்பாக்கத்தில் கணவர் இறந்த துக்கத்தை தாங்கிகொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

சுப்ரமணி(60) – தேவசேனா தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் சுப்ரமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கணவரின் மரணத்தை தாங்கிகொள்ள முடியாத தேவசேனா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கணவர் இல்லாமல் தன்னால் வாழ இயலாது என்று முடிவு செய்த தேவசேனா, தனது வீட்டின் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்தநாள் காலையில் இவர் வெளியே வராத காரணத்தால், அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் சடலமாக மிதந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: