கணவரை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் மனைவி: நேர்ந்த விபரீதம்!

0
369
Sign Up to Earn Real Bitcoin

கேரளாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் மாவட்டம் கொடுங்கத்தூரை சேர்ந்தவர் மீரா (24). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர்.

பாலக்காடு கோல்பாடம் பகுதியை சேர்ந்தவர் நவ்பல் (32). இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில் மீராவுக்கும், நவ்பலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் குடும்பத்தை தவிக்க விட்டு கொச்சிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

அங்கு இருவரும் வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் மீராவின் நடத்தையில் நவ்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மீரா இரு தினங்களுக்கு முன்னர் கடைத்தெருவிற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

இது குறித்து கோபமான நவ்பல் வீட்டுக்கு வந்து மீராவிடம் சண்டை போட்டார்.

பின்னர் நவ்பல் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொலை செய்து விட்டு தானும், தற்கொலை செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து சகோதரி தனது நண்பரை நவ்பல் வீட்டுக்கு அனுப்பிய நிலையில் மீரா ரத்த வெள்ளத்திலும், நவ்பல் மணிக்கட்டு அறுத்த நிலையில் தூக்குப்போட்டும் இறந்து கிடந்தனர்.

மீராவின் 1½ வயது குழந்தை மட்டும் தாய் இறந்தது தெரியாமல் அங்கேயே இருந்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் இரண்டு சடலங்களையும் கைப்பற்றிய அவர்கள் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: