கணவரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து கொண்ட மனைவி: நடுரோட்டுக்கு வந்த கணவன்!

0
663

பிரித்தானியாவில் சூதாட்டத்தில் கடனாளியான மனைவி கடனை அடைக்க கணவரை ஏமாற்றிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் போர்ட் என்பவருக்கும் ஜூலியானா போஸ்மேன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.

ஜூலியானாவின் பூர்வீகம் இந்தோனேசியாவாகும். இந்நிலையில், சூதாட்டத்துக்கு அடிமையான ஜூலியானா அதன் மூலம் பெரும் கடனாளியாகியுள்ளார்.

இதையடுத்து கணவரை ஏமாற்றி அந்த கடன்களை அடைக்க அவர் முடிவு செய்தார்.

அதன்படி, தான் விசா வாங்க வேண்டும் எனவும் அதற்கு £5 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களை கணக்காக காட்ட வேண்டும் எனவும் கிறிஸ்டோபரிடம், கூறியுள்ளார்.

இதையடுத்து தன்னிடமிருந்த அனைத்து பணத்தையும் கிறிஸ்டோபர் ஜூலியானாவிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் தனக்கு ஆங்காங்கே இருந்த £3.5 மில்லியன் கடன் தொகைகளை ஜூலியானா கொடுத்து முடித்துள்ளார்.

இதோடு அந்த பணத்திலிருந்து ஒரு தொகையை தனது பெற்றோர் மற்றும் சகோகதரருக்கும் கொடுத்துள்ளார்.

பின்னர் தான், மனைவி தன்னை ஏமாற்றியது கிறிஸ்டோபருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தனது சொந்த பங்களாவை விற்று விட்டு நடுத்தெருவுக்கு வந்துள்ளார் கிறிஸ்டோபர்.

தற்போது பிரிங்டனில் உள்ள தனது உறவினர் வீட்டில் அவர் தங்கியுள்ளார்.

தனக்கு துரோகம் செய்த மனைவியை பிரிந்துவிட்ட கிறிஸ்டோபர், என் இளகிய மனதை அவர் தவறாக பயன்படுத்தி கொண்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: