கணவன் தனது மனைவியின் தாலியை கழுத்தில் போட்டுக்கொண்டு தற்கொலை! என்ன காரணம்?

0
241

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் தாலியை வாங்கிச் சென்ற கணவன், அதனை தனது கழுத்தில் அணிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நாகைப்பட்டினத்தை சேர்ந்த நடராஜனுக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த ருக்மணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நடராஜனுக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததால் ருக்மணி கணவருடன் சண்டையிட்டு தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று மணப்பாறை சென்ற நடராஜன் ருக்மணியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அவரது தாலியை கழற்றி வாங்கிகொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

மனைவி தன்னுடன் வராததால் மனமுடைந்த நடராஜன் மனைவி கழற்றி கொடுத்த தாலியை தனது கழுத்தில் அணிந்து கொண்டு, மணப்பாறை குளித்தலை சாலையில் உள்ள கல்லூரி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சமப்வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: