கணவனை கொன்று காட்டுக்குள் வீசிய மனைவி: அம்பலமான அதிர்ச்சி தகவல்!

0
434

ஹைதராபாத்தில் கணவனை கொன்று காட்டுக்குள் வீசிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ராஜூ – கவிதா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உணவகம் ஒன்றை நடத்தி வந்த ராஜூ, தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்போடு பார்த்துக்கொண்டார்.

சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், சுமன் என்ற நபர் குறுக்கிட்டுள்ளார்.

கவிதாவும்-சுமனும் அடிக்கடி பேசிக்கொள்வதை பார்த்து ராஜூ கண்டித்துள்ளார். இருப்பினும் இதனை கண்டுகொள்ளாத கவிதா, சுமனுடன் நெருங்கி பழகியுள்ளார்.

ஆனால், இவர்களின் உறவுக்கு ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முடிவு செய்தார் கவிதா.

கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல குடித்துவிட்டு வந்துள்ளார் ராஜூ. மறைந்திருந்த சுமனும், உறவினரும் வீட்டுக்குள் புகுந்து அவரை வளைத்துப் பிடித்தனர், பின்னர் அவரது கை கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பிறகு சுமனும் அவர் உறவினரும் ராஜூவின் உடலை அவர் பைக்கிலேயே வைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றனர். குர்ரம்குடா கிராமத்துக்கு அருகே, காட்டுக்குள் பைக்குடன் அவர் உடலை போட்டுவிட்டு திரும்பிவிட்டனர்.

மறுநாள், என் கணவரை காணவில்லை என கண்ணீருடன் கவிதா பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், மறுநாள் ராஜூவின் உடல் கைப்பற்றப்பட்டது. கண்ணீர் விட்டு கதறி இறுதி சடங்கு செய்தார்கள் உறவினர்கள்.

பொலிசாருக்கு கவிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், உண்மையை ஒப்புக்கொண்டார் கவிதா. பிறகு அவரது கள்ளக்காதலன் சுமன், உறவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: