கடுமையான பல்வலியா? இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ!

0
1400

பல்வலி பல்வேறு விதமான காரணங்களால் ஏற்படுகிறது. பல் முளைத்தல், பல் விழுதல், பல் சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் தேய்வு , இதத்தகைய பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ!

தேவையான பொருட்கள்:

கிராம்பு
தேங்காய் எண்ணெய்
உப்பு
மிளகு
தண்ணீர்

செய்முறை:

முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும்.

இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் புளி, உப்பு சம அளவு எடுத்து கலந்து வீக்கம் ஏற்பட்ட இடத்தில் 3 வேளை போட வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: