கடிகாரத்தின் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்த தமிழன்! தீயாய் பரவும் புகைப்படம்!

0
428

என்னதான் தொழிநுட்பம் வளர்ந்தாலும், தமிழ் மக்களின் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பல முக்கிய விஷயங்களுக்கு பின்பும் அறிவியல் உண்மை புதைந்து தான் இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு முன்னாலே உருவானது தான் நம் தமிழ் மொழி என பெருமை கொள்வதை நம்மால் உணர முடியும் அல்லவா?

எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற உணர்வு நம் தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்டு நாடு விட்டு நாடு சென்றாலும் கூட தமிழ் மொழியை மறக்க தான் முடியுமா? பேசாமல் தான் இருக்க முடியுமா இப்படி தமிழை பற்றி பெருமை கொள்ள கோடிகள் உண்டு.

அந்த வரிசையில் தற்போது, சுவர் கடிகாரத்திர்கு உயிர் எழுத்துக்கள் மூலம் உயிர் கொடுத்து உள்ளார் ஒரு தமிழர். உயிரெழுத்து 12 உள்ளது அல்லவா? அந்த 12 எழுத்துக்களையும் 1 – க்கு அ என்றும் 12 – ஔ வரை குறிப்பிட்டு 12 மணி நேரத்தையும் அழகாக புரிந்துகொள்ளும் வண்ணம் ஏற்படுத்தி உள்ளார் முகம் தெரியாத ஒரு தமிழர்.

இவரின் இந்த தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் வெளிப்பாடான இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு பாராட்டு பெற்று வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபூண்டுடன் ரெட் ஒயினை குடிப்பதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்! நிச்சயம் ஷாக் ஆவீங்க!
Next articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்!