கடற்பாசிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்! உங்களுக்கு தெரியாத பல மருத்துவ பயன்கள் நிறைந்த கடல் பாசி !

0

கடற்பாசிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்! உங்களுக்கு தெரியாத பல மருத்துவ பயன்கள் நிறைந்த கடல் பாசி !

பூமியில் வளரும் பலவகையான தாவரங்களை நாம் மூலிகைகளாகப் பயன்படுத்துவதனைப் போன்று கடல் தாவரங்களான பாசிகளும் கூட முக்கியமான பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

பொதுவாக கிரேசி, லேரியா மற்றும் அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து பெறப்படும் ‘அகார் அகார்’ என்னும் பொருளினை ரொட்டி, பாலாடைக் கட்டி முதலியனவற்றைப் பதப்படுத்தவும், இறைச்சி மற்றும் மீன் முதலியனவற்றை தகரங்களில்; அடைத்துப் பதப்படுத்தி நீண்ட காலம் பாவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

ஸ்பைருலினா பாசியில் உள்ள புரதம் போன்ற சத்துக்கள் இலகுவில் சமிபாடடையச் செய்வதுடன்;, சலரோக நோயாளிகளிற்கு அவசியமான சக்தியை வழங்குவதாகவும்;, புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் பாதுகாப்பதாகவும் பல்வேறுபட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், கிப்னியா நிடிபிகா என்னும் கடல் பாசி வயிற்றுத் தொல்லைகள் மற்றும் தலைவலி போன்றனவற்றை நீக்குவதுடன், துர்வில்லியா என்னும் கடல்பாசி தோல் நோயையும் குணப்படுத்துகின்றது. உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு மற்றும் ‘அகார் அகார்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி போன்றனவற்றைச் சேர்ப்பதன் மூலம், கருத்தரிப்பதனை தாமதப்படுத்தக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்றாகிய தைராய்டு குறைபாட்டை நீக்கி தைராய்டு சீராக்கிட உதவுகின்றது.

இன்னும், புற்றுநோய், மூட்டு வலி, சலரோகம்;, காசநோய், இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை சிலவகையான பாசிகளை கொண்டு தடுக்கப்படுகின்றதுடன், சிலவகையான கடல் பாசிகளின் மருத்துவ குணங்களைப் பயன்படுத்தி குடல் மற்றும் அல்சர்க்கு தன்மையை நீக்குவதுடன், உடல் சூட்டையும் தணிக்கின்றது. இதில் வைட்டமின், மினரல் மற்றும் புரோடீன் நிறைந்து இருக்கிறமை குறிப்பிடதக்கது.

குறிப்பாக, இதன் மருத்துவ குணம் அறிந்து கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றதுடன், இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விசேசமாக, விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர் என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு! இது தான் அந்த ரகசியம் !
Next articleThirukkural Vinaithitpam Adhikaram-67 திருக்குறள் வினைத்திட்பம் அதிகாரம்-67 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil வினைத் திட்பம்