ஒரே தம்பிக்கு 11 சகோதரிகள் சொந்த செலவில் கோலாகலமாக நடத்திய திருமணம்: ஆச்சரிய பின்னணி!

0
392

சீனாவில் 11 சகோதரிகள் தங்களின் ஒரே தம்பிக்கு தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து திருமணம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்சி மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் மொத்தம் 12 பிள்ளைகள் உள்ளார்கள்.

இதில் 11 பேர் பெண்கள் ஆவர். அவர்களின் ஒரே தம்பி கயோ ஹசின் (22).

இந்நிலையில் ஹசிக்கு தங்கள் சொந்த செலவில் அவரின் 11 சகோதரிகளும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதற்காக எல்லோரும் சேர்ந்து மொத்தமாக $48,000 பணத்தை தயார் செய்திருந்தனர்.

அதை வைத்து தங்களின் ஒரே தம்பியின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர்.

இது குறித்து கயோவின் ஒரு சகோதரி யூ கூறுகையில், எங்களில் ஒவ்வொரு சகோதரியும் முழு மனதோடு பணம் செலவு செய்து தம்பிக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்.

ஒரே தம்பி என்பதால் அவன் மீது எங்களுக்கு பாசம் அதிகம். எங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரிகளில் நான் மட்டும் உயர்பள்ளி வரை படித்துள்ளேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: