ஒரு சிலர் மெத்தப் படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே!

0
413

சனி கடகத்திற்கு வ‌‌ந்தது முதலே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. புத்தாண்டு முதல் (2009) இளங்கலைப் படிப்பை ஒரு பிரிவிலும், முதுகலைப் படிப்பை மற்றொரு பிரிவிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தற்போது சனி சிம்மத்தில் இருப்பதால் ஒரே துறையில் படிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இளங்கலையில் அறிவியல் படித்தார்; முதுகலையில் கலைத்துறையில் பட்டம் வாங்கினார்; ஆனால் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் 6 மாத பட்டயப்படிப்பை மற்றொரு துறையில் முடித்து விட்டு அதே துறையில் வேலைக்கு சேர்ந்து விட்டார் என்பது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும்.

எனவே, ஒருவரது ஜாதக அமைப்பில் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் 2வது இடம் ஆரம்பக் கல்வியும், 4ஆம் இடம் உயர்கல்வியும், 9வது இடம் மேல்நிலை (பல்கலை, கல்லூரி) கல்வியும் குறிப்பதால் இங்கே குறிப்பிட்ட மூன்று இடங்களும் செம்மையாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய வீடுகளுக்கு உரிய கிரகங்களைத் தாண்டி புதன், சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். தேக்கி வைப்பது (அறிவாற்றல்) சந்திரன் என்றால் அதனை தக்க சமயத்தில், தக்க முறையில் வெளிப்படுத்துவது புதன்.

ஆரம்பத்தில் என்ன தசை நடக்கிறது. அடுத்து என்ன தசை வரப்போகிறது என்று ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு படிக்கும் துறையைத் தேர்வு செய்தால் மனதில் தடுமாற்றம் ஏற்படாது.

Previous articleமேற்கு பார்த்த வீட்டில் இருப்பதால் திருமணம் நடைபெறவில்லை என்று சிலர் கூறுவது பற்றி!
Next articleசரஸ்வதி, லட்சுமி உருவப்படங்களை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்!