ஏழரை சனியில் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்!

0
881

ஜோதிடத்தில் ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்.

ஏழரைச் சனியில் செய்யக் கூடாதவை என்ன?
தொழில் தொடங்குதல், தொழிலில் கூட்டு சேர்த்த, புதிய முதலீடுகள், புதிய நட்பின் உறவுகள் கொள்வது மற்றும் புதிய மனைபுகுதல் போன்றவை செய்யக் கூடாது.
திருமணங்கள், அஸ்திவாரங்கள் போடுவது, பெயர், உடை, தினசரி வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது.
பத்திரங்கள் பதிவு செய்வது, கையெழுத்து போடுவது, புதிய நவீன மருந்துகள் சாப்பிடுவது, புதிய சம்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்யக் கூடாது.
கடன்கள் கொடுப்பது, வாங்குவது, மது குடிப்பது, இரவில் அதிகமாய் விழித்திருப்பது மனதை திட்டங்களுக்காக அலைக்கழிப்பது போன்றவை கூடாது.
புதியதாக அரசியலில் ஈடுபடுதல், வாகனங்களை வேகமாக ஓட்டுவது, எந்த ஒரு செயலிலும் அவசரம் அல்லது பதட்டமாக செய்வது இது போன்ற செயலில் ஈடுபடவேக் கூடாது.
ஏழரைச் சனியில் செய்ய வேண்டியவை என்ன?
வாடகை வீட்டுக்கு குடியேறலாம். வெளியூர் வேலைகளுக்கு செல்லலாம்.
பழைய கடன்களை அடைக்கலாம். மகப்பேறு செய்து கொள்ளலாம்.
உயில்கள் எழுதி வைக்கலாம். தான தர்மம் செய்யலாம்.
பழைய கோவில்களை திருத்திக் கட்டலாம். குலதெய்வ வழிபாடுகள் செய்யலாம்.
சீமந்தம் வளைகாப்பு செய்யலாம். சுபவிஷேசங்களுக்கு செலவிடலாம்.
பழைய கட்டிடங்கள் வேலை செய்யலாம். பழைய பொருட்களை விற்கலாம்.
புனித யாத்திரைகள் ஏதேனும் உதவி செய்யலாம். நல்ல விரதங்களை கடைப்பிடிக்கலாம்.
தினமும் அதிகாலையில் எழுந்து தியானம் யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: