ஏப்ரல் 25 முதல் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது

0

ஏப்ரல் 25 முதல் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் இந்த ராசிக்காரங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது!

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி செவ்வாய் கும்ப ராசிக்கு மாறியுள்ளார். மறுநாள் ஏப்ரல் 8 ஆம் திகதி புதன் மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் புதன் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார்.

அதே போல் மார்ச் 15 ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணித்த சூரியன், ஏப்ரல் 14 ஆம் திகதி மேஷ ராசிக்கு சென்றார். ஏப்ரல் 25 முதல் புதனும் சூரியனும் மேஷ ராசியில் பயணிப்பதால், புதாதித்ய யோகம் உருவாகிறது.

மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. அவர்கள் யார் யார் என பார்ப்போம்.

மேஷம்

புதனும், சூரியனும் மேஷ ராசியின் முதல் வீட்டில் இணைவதால், இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியம், நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் போன்றவை அதிகரிக்கும்.

இக்கால கட்டத்தில் முதலீடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாவதால், இக்காலத்தில் உங்களின் கௌரவம் உயரும்.

வெளிநாடு தொடர்பான வியாபாரத்தால் நன்மை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், இக்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் இணைகிறார்கள். சொந்த ராசியில் புதன் சூரியனுடன் இணைவதால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் தீரும். முக்கியமாக இக்காலத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

புதன் மற்றும் சூரியன் சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் இணைகிறார்கள். இதனால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்தித்த தடைகள் இக்காலத்தில் நீங்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் உயரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 24.04.2022 Today Rasi Palan 24-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 25.04.2022 Today Rasi Palan 25-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!