எலும்பு முறிவுக்கு பலவகையான இயற்கை வைத்திய முறைகள் ! முறிந்த எலும்பை விரைவில் சரி செய்ய முடியும்.

0
2376

எலும்பில் உண்டாகும் விரிசல் தான் எலும்பு முறிவு என்று அறியப்படுகிறது. எலும்பு முறிவுகளின் பெரும் சதவிகிதம் மிகப்பெரிய அழுத்தம் அல்லது சக்தி மிகுந்த தாக்கத்தின் விளைவாகும். சில நபர்களுக்கு எலும்புப்புரை , புற்றுநோய், முறையற்ற எலும்பாக்கம் போன்ற பாதிப்புகளால் எலும்பு முறிவு உண்டாகலாம். எலும்பு முறிவு ஏற்பட பல்வேறு வழிகள் உண்டு. எலும்பில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அதன் அருகில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் இருந்தால் அது மூடு முறிவு ஆகும். எலும்பை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் அது திறப்பு முறிவு அல்லது கூட்டு முறிவாகும்.

எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அறிய முதல் கட்டமாக உடல் சார்ந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பின்வரும் சில சோதனைகள் நடத்தப்படுகிறது,

எக்ஸ்ரே
MRI ஸ்கேன்
CT ஸ்கேன்
உங்களுக்கு எலும்பு முறிவு இருப்பது கண்டுபிடிக்கபட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மருத்தவ சிகிச்சை என்பது மிகவும் அவசியம். அதனுடன் இணைத்து சில வீட்டுத் தீர்வுகளையும் நீங்கள் மேற்கொள்வதால் வலி குறைந்து விரைவில் இயல்பு நிலைமைக்கு திரும்பலாம்.

கருப்பு சீரக விதைகள் அல்லது கருப்பு சீரக எண்ணெய் :
தேவையான பொருட்கள்

ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் அல்லது அதன் எண்ணெய்
செய்முறை

கருஞ்சீரக எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து சூட வைக்கவும். சூடான இந்த எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். பிறகு காய விடவும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யவும்.

இது எப்படி வேலை செய்கிறது?
பல்வேறு மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சையில் இந்த எண்ணெய் பயன்படுகிறது. இதன் எலும்பு வலுவூட்டும் நடவடிக்கை, எலும்பு முறிவு சிகிச்சையில் இது திறம்பட உதவுகிறது. பிஎம்சி காம்ப்ளிமென்டரி மற்றும் மாற்று மருத்துவம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி கருஞ்சீரக எண்ணெய் எலும்புப்புரை நோயை எதிர்க்கிறது என்பது அறியப்படுகிறது.

எலும்பு முறிவிற்கான வீட்டுத் தீர்வுகள் மஞ்சள்
தேவையான பொருட்கள்

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு கிளாஸ் சூடான பால்
செய்முறை

ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

மஞ்சள் கலந்த பாலை உடனடியாக பருகவும்.

தினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனைப் பருகவும்.

இது எப்படி வேலை செய்கிறது?
மஞ்சளில் உள்ள குர்குமின் காயம் வேகமாக ஆறுவதற்கு ஏற்ற விதத்தில் செயல் புரிகிறது. குர்குமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அழற்சி எதிர்ப்பு தன்மையை வெளிப்படுத்துவதால், உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி பெற்று வீக்கம் விரைவில் குறைகிறது.

எசன்ஷியல் ஆயில் ,லாவெண்டர் எண்ணெய்
தேவையான பொருட்கள்

3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை

இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் மூன்று அல்லது நான்கு துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

இயற்கையாக காயும் வரை அப்படியே விடவும்.

ஒரு நாளில் பலமுறை இதனைச் செய்யலாம்

இது எப்படி வேலை செய்கிறது?
எலும்பு முறிவை குணப்படுத்துவதில் லாவெண்டர் எண்ணெய் பல நன்மைகளைச் செய்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் எலும்பு முறிவு உண்டான இடத்தில் வலியைக் குறைக்க உதவுகிறது.

விளக்கெண்ணெய்
தேவையான பொருட்கள்:

பாரம்பரிய விளக்கெண்ணெய் தேவையான அளவு
ஒரு தூய்மையான சிறிய துணி
செய்முறை
ஒரு சிறிய துணியை பாரம்பரிய விளக்கெண்ணெய்யில் ஊற வைக்கவும்.

ஊற வைத்த துணியை எண்ணெயில் இருந்து எடுத்து பிழிந்து அந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஒத்தி எடுக்கவும்.

அந்த துணியை ஒரு இரவு முழுவதும் அப்படியே விடவும்.

தினமும் இதனைச் செய்து வரலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?
விளக்கெண்ணெய்யில் உள்ள முக்கிய செயல்பாட்டு சேர்மங்களில் ஒன்று ரிசினோலிக் அமிலம். இந்த கூறில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது, இது காயத்திற்கு இதமளித்து எலும்பு முறிவுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவுகிறது.

எள்ளு
தேவையான பொருட்கள்

1-2 ஸ்பூன் வறுத்த எள்ளு

செய்முறை
தினமும் வறுத்த எள்ளை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வரவும். கூடுதலாக, பாதிக்கப்பட்ட இடத்தில் எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய்யை தடவி வரலாம். இதனால் காயம் விரைவாக குணமாகும். தினமும் ஒரு முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

இது எப்படி வேலை செய்கிறது?
எலும்பு முறிவில் இருந்து வேகமாக குணமளிக்கும் ஊட்டச்சத்துகளான கால்சியம் மற்றும் இரும்பு எள்ளில் அதிகம் உள்ளது. எள்ளில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதால், வீக்கம் மற்றும் வலிக்கான அறிகுறிகளைக் குறைத்து எளிதில் குணமடைய வைக்க உதவுகிறது.

போரான்
தேவையான பொருட்கள்:

3-20 மிகி போரோன்

செய்முறை

உங்கள் தினசரி உணவு மூலம் போரோனின் இயற்கையான ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள். கொண்டைக்கடலை, பாதாம், பீன்ஸ், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், ப்ரோகலி, பயறு போன்ற உணவுகள் போரோன் அதிகம் உள்ள உணவுகள் ஆகும். மருத்தவ ஆலோசனையின் பேரில் இந்த ஊட்டச்சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?
கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் D, ஈஸ்ட்ரோஜன் போன்ற பல எலும்பு கட்டமைப்பு காரணிகளுக்கு போரோன் தேவை. மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு, போரோன் எலும்புப்புரை மற்றும் பலவீனமாக்கும் முறிவுகளை சமாளிக்க உதவும் ஹார்மோன்களை தூண்டுவதாக நம்பப்படுகிறது

தேங்காய் எண்ணெய்
ஒரு ஸ்பூன் பாரம்பரிய தேங்காய் எண்ணெய்

செய்முறை
உங்கள் தினசரி உணவின் மூலம் தினமும் ஓர் ஸ்பூன் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

நல்ல பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?
தேங்காய் எண்ணெய்யை உங்கள் உடலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உங்கள் எலும்புகள் வலிமை அடைகிறது, எலும்புப்புரை நோயுடன் தொடர்புடைய எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, வீக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

எப்சம் உப்பு
தேவையான பொருட்கள்:

ஒரு கப் எப்சம் உப்பு

தண்ணீர்

செய்முறை
பாத் டப்பில் ஒரு கப் எப்சம் உப்பு சேர்க்கவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரால் உங்கள் பாத் டப்பை நிரப்பவும்.

இந்த நீரில் 20-30 நிமிடங்கள் மூழ்கி இருக்கவும்.

தினம் ஒரு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்யலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?
எப்சம் உப்பு அதன் கலவை காரணமாக மெக்னீசியம் சல்பேட் எனவும் குறிப்பிடப்படுகிறது. எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் உட்செலுத்துதல் வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது, இது வலி, வீக்கம், ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கற்றாழை சாறு
தேவையான பொருட்கள்:

ஒரு கப் பிரெஷ் கற்றாழை சாறு

செய்முறை:
தினமும் ஒரு கப் கற்றாழை சாறு பருகி வரவும்.

காயத்தின் தற்காலிக நிவாரணத்திற்காக கற்றாழை ஜெல்லை அந்த இடத்தில் தடவலாம். இதனால் வலி மற்றும் வீக்கம் தற்காலிகமாக குறையும்.

சில வாரங்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரு முறை இந்த சாற்றைப் பருகலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?
கற்றாழையில் அசிமெனன் என்ற பாலிசாக்கரைடு இருப்பதால், இயற்கை குணப்படுத்துதல் மற்றும் இதம் தரும் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இது உங்கள் எலும்பு அடர்த்தி அதிகரிக்க உதவுகிறது, இதனால் எலும்பு முறிவு விரைந்து குணமாகும்

வருங்காலத்தில் எலும்பு முறிவைத் தடுப்பதற்கு இங்கே சில குறிப்புகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் காணலாம்.

குறிப்புகள்:
உங்கள் உணவில் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் டி சத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரிய ஒளியை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இது எலும்பு வலிமை அடைவதற்கு முக்கிய ஊட்டச்சத்தாகும்.

உடற்யிற்சிகளான சிறிய அளவு பளு தூக்குதல், ஸ்கிப்பிங், நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

புகை பிடிக்க வேண்டாம். மது அருந்துவதை குறைத்துக் கொள்ளவும்.

எலும்பு முறிவு முற்றிலும் குணமடையும் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் [பார்த்துக் கொள்ளவும்.

எலும்பு முறிவு முற்றிலும் குணமடைந்த பின்னும் அந்த இடத்தின் அதிக பயன்பாட்டை தவிர்க்கவும், ஏனென்றால் இந்த பகுதிக்கு இன்னும் சிறிது ஓய்வு தேவை. எலும்பு முறிவு பாதிக்கப்பட்ட இடம் அசைவற்று இருப்பதால் குணமடையும் வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஆகவே எலும்பு முறிவு உண்டான இடத்தை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன வாசகர்களே, இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருந்ததா? எலும்பு முறிவை இயற்கையாக குணப்படுத்தும் மேலும் சில இயற்கை தீர்வுகள் உங்களுக்கு தெரிந்தால் எங்களுடன் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வகைகள்
ஊசி முறிவு (Avulsion fracture) – உங்கள் எலும்பு மீது தசை அல்லது தசைநார் இழுப்பது காரணமாக உண்டாகும் முறிவு. சிறுதுண்டு முறிவு (Comminuted fracture) – எலும்புகள் தூள் தூளாக நொறுங்குவது இதன் இயல்பாகும்.

அழுத்த முறிவு – இது பொதுவாக முதுகெலும்பு போன்ற இடங்களில் உண்டாகும்.

கூட்டு இடப்பெயர்வு – மூட்டு பகுதியில் இடப்பெயர்வு ஏற்பட்டு அதன் எலும்புகளில் முறிவு ஏற்படுவது. பச்சைக் கொம்பு முறிவு – எலும்பு முற்றிலும் உடைக்கப்படாமல் ஒரு பகுதி மட்டுமே உடைவது

மயிர் எலும்பு முறிவு (Hairline fracture) – பகுதி எலும்பு முறிவு

அழுத்தமாகச் செருகிய முறிவு (Impacted fracture) – எலும்பு முறிவின் விளைவாக உடைந்த ஒரு பகுதி எலும்பு மற்றொரு எலும்பில் நுழையும் போது ஏற்படுவது

உள் முறிவு (Intraarticular fracture) – ஒரு எலும்பு முறிவு மூட்டு மேற்பரப்பில் நீட்டிக்கும்போது. உண்டாவது

நீளமான முறிவு – குறுக்கில் ஏற்படாமல் நீளமாக உண்டாகும் எலும்பு முறிவு

சாய்ந்த எலும்பு முறிவு (Oblique fracture) – சாய்வாக உண்டாகும் எலும்பு முறிவு

நோயியல் முறிவு (Pathological fracture) – ஒரு மருத்துவ பிரச்சினை உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தி இதனால் உண்டாகும் எலும்பு முறிவு

சுழல் முறிவு (Spiral fracture) – முறுக்கப்பட்ட எலும்புடன் கூடிய ஒரு முறிவு

அழுத்த எலும்பு முறிவு (Stress fracture) – மீண்டும் மீண்டும் அழுத்தம் மற்றும் திரிபு காரணமாக ஒரு எலும்பு உடைகிறது.

கொக்கி எலும்பு முறிவு (Torus or buckle fracture) – விரிசல் இல்லாமல் உண்டாகும் எலும்பு முறிவு

ட்ரான்ஸ்வர்ஸ் எலும்பு முறிவு (Transverse fracture)- எலும்பில் இடையில் உண்டாகும் ஒரு நேர் எலும்பு முறிவாகும்.

எலும்பு முறிவுகள் பாதிக்கப்பட்ட எலும்புகளை பொறுத்து ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.

மிக அதிகமாக பாதிக்கப்படும் எலும்புகள், கண் சுற்றுப்பாதை எலும்பு, இடுப்பு எலும்பு, கழுத்துப் பட்டை எலும்பு, முழங்கால் சிற்றெலும்பு , குதிகால் எலும்பு, தொடையெலும்பு ஆகியவை. இப்போது எலும்பு முறிவின் அறிகுறிகளைப் பார்க்கலாம்.

அறிகுறிகள்
எலும்பு முறிவுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வீக்கம்

சிராய்ப்பு வலி

வலி

சரும நிறமாற்றம்

பாதிக்கப்பட்ட பகுதி அசாதாரண கோணத்தில் வளைவது

பாதிக்கப்பட்ட இடத்தில் அதிக எடை சுமப்பதில் அசௌகரியம் உண்டாவது

அசைய முடியாமை

பாதிக்கப்பட்ட பகுதியில் உராய்வு உணர்வு

திறந்த எலும்பு முறிவாக இருக்கும் பட்சத்தில் இரத்தம் வெளியேறுவது

பொதுவாக, வெளிப்புறம் இருந்து வரும் மிகப்பரிய அழுத்தம் அல்லது தாக்கம் எலும்பு முறிவை உண்டாக்கும். இதற்கான மற்ற காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

காரணங்கள்
வாகன விபத்து அல்லது கீழே விழுவதால் எலும்பு முறிவு உண்டாகலாம். ஒரு சக்தி மிகுந்த தாக்குதலை எதிர்கொள்ள பலமான எலும்புகள் தேவை. வயது அதிகரிப்பது மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாட்டால் எலும்புகள் பலவீனமாகலாம். இதனால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

உங்கள் எலும்புகள் எளிதில் உடைந்து போகக்கூடிய சில அடிப்படை மருத்துவ நிலைமைகள்:

எலும்புப்புரை

தொற்று

ட்யுமர் அல்லது புற்று நோய்

காரணிகள்
பின்வரும் காரணிகள் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.

வயது: வயதானவர்களும், சிறு குழந்தைகளும் எலும்பு முறிவால் அதிகம் பாதிக்கப்படலாம். இதற்குக் காரணம் இவர்களுக்கு இருக்கும் பலவீனமான எலும்புகள். ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப காயம் உண்டாவது (குறிப்பாக விளையாட்டு வீரர்கள்).

மெனோபாஸ்
ஒரு விபத்து அல்லது காயத்திற்கு பிறகு உங்களுக்கு எலும்பு முறிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ள மருத்துவ உதவியை நாடுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதற்கொலை செய்து கொண்ட கணவன்! 8 வருடம் கழித்து இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்!
Next articleசூப்பர் சிங்கர் ரித்திக்கை அசிங்கப்படுத்திய மா.கா.பா.! அம்பலமான சூட்டிங் ஸ்பாட் ரகசியம்! நேர்காணலில் குழம்பிய பூவையர்!