எலும்புகளில் அடிபட்டு புண்கள் ஏற்பட்டால் எலும்பைக் காக்க எளிய வழிகள்!

0

அறிகுறிகள்:
எலும்புகளில் அடிபட்டு புண் உண்டாகுதல்.

தேவையானவை:
வெள்ளை குங்கிலியம்.

செய்முறை:
வெள்ளை குங்கிலியத்தை சிறிதளவு தினமும் உட்கொண்டு வந்தால் எலும்பில் ஏற்பட்ட புண் குணமடையும்.

‘அடடா அந்தப் பையன் எவ்வளவு அழகா இருக்கான்ல?’, ‘வாவ்…உன்னை மாதிரி ஒரு அழகியை நான் பார்த்ததே இல்லை!’ என்றெல்லாம் சிலிர்க்கிறோம், ரசிக்கிறோம். ஆனால், நம் எல்லோரின் தோலுக்கு அடியிலும் இருப்பதென்னவோ, எலும்புக்கூடுதான். பள்ளி ஆய்வுக்கூடத்தில் எலும்புக்கூட்டைப் பார்த்ததும் அச்சத்துடனும் அருவெறுப்புடனும் ஒதுங்கிப்போயிருப்போம். ஆனால் உண்மையில் உடலின் ஆதாரமே, அதைத் தாங்கியிருக்கும் எலும்புக் கூடுதான். சிறிய, பெரிய எலும்புகள் மற்றும் மூட்டுகள் எனப் பிரமாதமாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டடத்தைப்போல எலும்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இயங்குவதுதான் மனித உடல்.

தலை, கை, கால், கழுத்து, இடுப்பு, முதுகுத் தண்டுவடம், விரல்கள், பாதம் என, உச்சி முதல் பாதம் வரை வியாபித்திருக்கும் எலும்புகள், ஏதாவது ஒரு வகையில் அடிபட்டாலோ, நொறுங்கினாலோ, முறிந்தாலோ… நம் உடலின் இயக்கம் முடங்கிவிடும். தவிர, மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, எலும்பு நீட்சி, ஜவ்வு வளர்தல் என எத்தனையோ கோளாறுகள் வேறு. அதனால்தான், சிறு மூட்டு வலியில் தொடங்கி, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோபொரோசிஸ் என வரிசைகட்டி வருகின்றன எலும்பு தொடர்பான நோய்கள். நம் எலும்புகளின் மீது அக்கறை எடுத்துக்கொண்டால், மூட்டு தேய்மானங்களையும் வலிகளையும் தள்ளிப்போடலாம்… ஏன் தடுத்தே நிறுத்தலாம்.

எலும்புகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள் மற்றும் நிவாரணங்கள், எலும்பைப் பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறார், சென்னை விசா மருத்துவமனையைச் சேர்ந்த, எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் டி.வி.ராஜா.

”எலும்புகளில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகள் தேய்மானமும் அடர்த்திக் குறைவும்தான். எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்பட முக்கியமான காரணங்கள், நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட் வகைகள், சூரிய வெளிச்சம் அதிகம் படாத வாழ்க்கைமுறை போன்றவை. சூரிய ஒளியிலிருந்து நமக்குக் கிடைக்கும் வைட்டமின் டி சத்துக் குறைவுதான், பல எலும்பு தொடர்பான நோய்களுக்கு ஹாய் சொல்லி வரவேற்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎலும்புகள் வலிமையுடன் தேய்மானமின்றி இருக்க இரவு ஆகாரத்திற்குப் பின் இதில கொஞ்சம் சாப்பிடுங்க !
Next articleசீத்தாப்பழத்தின் (அன்னமுன்னா) கொட்டைகளுக்குள் இருக்கும் இந்த குணங்கள் பற்றி தெரியுமா? படித்துப்பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள் !