கொரோனா போன்ற நோய்க்கிருமி அச்சமா? எலுமிச்சை பழத்தை அறுத்து படுக்கையறை மூலைகளில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

0
1187

எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்

நம் உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுசூழலில் உண்டாகும் எதிர்மறை மாற்றங்களுக்கும் கூட செயற்கை பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தான் சிறந்த தீர்வை அளிக்கவல்லது.

அந்த வகையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள எலுமிச்சை உடலை மட்டுமின்றி, வீட்டையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் ஒருசில உடல்நல குறைபாடுகள் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பாக்டீரியாக்கள்! நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அந்த நோய் தொற்று பெருகாமலும், அதிகரிக்காமலும் பாதுகாக்க முடியும்.

நுரையீரல் மற்றும் மூச்சு! நீங்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவும். இதன் நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் நுரையீரல் செயற்திறன் மற்றும் மூச்சு சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

ஆஸ்துமா, சளி, அலர்ஜி! இதுமட்டுமின்றி, எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து உறங்குவதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜியை கட்டுப்படுத்தலாம். தொண்டை அடைப்பு கூட சரியாகும் என கூறப்படுகிறது.

நறுமணம்! எலுமிச்சையின் நறுமணம் படுக்கையறையில் துர்நாற்றம் எழாமல் பார்த்துக் கொள்ளும். மேலும், நாள் முழுதும் நறுமணம் வீச உதவும்.

எலுமிச்சை நீரை பருகுவது இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, உடல்நலனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது. எலுமிச்சை தோலை வைத்து தேய்ப்பதால், முழங்கை, முழங்கால் பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்ய முடியும். மேலும், கருவளையம், பரு மற்றும் உச்சந்தலை பிரச்சனைகளுக்கும் இது நல்ல பலனை அளிக்கவல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: