மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

0

நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும்.

மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் மாதுளம் பழம் கொண்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
மாதுளம் பழம் – 2
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பனங்கற்கண்டு – 5 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் – 4
புதினா – 5

செய்முறை:
மாதுளம் பழம், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, நான்கைந்து டீஸ்பூன் பனங்கல்கண்டு, ஒரு சிட்டிகை உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் ஐஸ் கட்டிகளை கலந்த, புதினா இலைகளை மிதக்க விட்டால், மாதுளம் பழம் ஜூஸ் தயார்.

நன்மைகள்:
மாதுளம் பழத்தை ஜூஸ் அல்லது பழமாக சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும் என்று ஒரு ஜப்பானிய பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது.

ஏனெனில் மாதுளம் பழத்தில் நமது உடல் நலனை மேம்படுத்தக் கூடிய ஆன்ட்டி- ஆக்சிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளாதால், இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் செரட்டொனின் சுரப்பியை தூண்டி, மனதை அமைதிப் படுத்தி, எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது.

மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதளவு உள்ளன. கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது.

மாதுளம்பழத்தில் அதிகப்படியான பாலிபினால் இருக்கிறது. இதனால் மாதுளம்பழம் சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படுகிறது. உடலில் தேவையின்றி தங்கிடும் டாக்ஸிங்களை நீக்குவதில் முதலிடம் வகிக்கிறது.

தேவையற்ற டாக்ஸின்களை அகற்றுவதன் மூலம் செல் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுத்திடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅழகான பொலிவான சருமத்திற்கு இலகுவான டிப்ஸ்!
Next articleரத்தத்தில் ஏற்படுகிற ரத்த உறைவுப் பிரச்சனையை தீர்க்கும் அன்னாசிப் பழம்!