துருக்கியில் வேலைக்கு சென்று தாமதமாக வீடு திரும்பிய மகளை கொலை செய்துவிட்டு கூலாக பொலிஸ் நிலையத்தில் கூறிய தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துருக்கியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ஆயிஷா தன்னுடைய தந்தை பிரித்து சென்றது முதல், பொழுது போக்கு மையம் ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்.
வேலைக்கு சென்றுவிட்டு தினமும் தாமதமாக வருவதால், ஆயிஷாவிற்கும் அவருடைய தாய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் 27-ம் தேதியன்று பொலிஸ் நிலையம் வந்த ஆயிஷாவின் தாய், வீட்டிற்கு சென்று பாருங்கள் அங்கு என்னுடைய மகளின் சடலம் இருக்கும். நான் அவளை கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், வீட்டிற்கு சென்று பார்க்கும்போது ஆயிஷாவின் சடலம் கிடந்துள்ளது.
அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார், அவருடைய தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதுகுறித்து ஆயிஷாவின் நண்பர்கள் கூறுகையில், ஆயிஷா எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பாள். ஆனால் ஒரு சில நேரங்களில் மட்டும் சோகமாக இருப்பாள். அவள் தாமதமாக வீட்டிற்கு செல்வதால், அவளுடைய அமாம் அதிக தொல்லை கொடுப்பாராம்.
சமீபத்தில் கூட, என் அம்மாவால் விரைவில் இறந்துவிடுவேன் என ஆயிஷா கூறியதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.