உலகிலேயே மிகவும் அசிங்கமான நாயாக தேர்வு செய்யப்பட்ட சீசா உயிரிழந்தது!

0
367

உலகிலேயே மிகவும் அசிங்கமான நாயாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சீசா சீசா என்ற நாய் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் வாழ்ந்து வரும் அனோகோ என்பவருக்குச் சொந்தமான நாய் சீசா சீசா.

இந்த நாய் சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்டு தோறும் நடக்கும் அசிங்கமான நாய்களுக்கான போட்டியில் உலகிலேயே அசிங்கமான நாய் என்ற பட்டத்தை வென்றது.

இந் நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சீசா சீசா நாய் இறந்து விட்டதாகவும். தூங்கும் போதே அது உயிரிழந்து விட்டதாகவும் உரிமையாளர் அனோகோ தெரிவித்துள்ளார்.

சீசா சீசாவுக்கு 9 வயது தான் ஆகிறது. உலகிலேயே அவலட்சணமான நாயாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அதனை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தார் உரிமையாளர் அனோகா. ஆனால் அதற்கு இப்படி நடந்துவிட்டதாக அனோகா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நீளமான நாக்கு கொண்டிருந்ததால் வாயிக்குள் அதன் நாக்கை வைக்க முடியாமல் அதன் வாயிலிருந்து எச்சில் வந்து கொண்டே இருக்கும். அதன் பற்களும் நீளமாக இருக்கும் என்று சீசா சீசா குறித்து அனோகோ விவரிக்கிறார். சீசா சீசாவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: