உடல் எடையை விரைவாக‌ குறைக்க தினமும் ஓட்ஸ் சாப்பிடலாமா? இல்லையா?

0

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பலர் காலை உணவாக சாப்பிடுவது ஓட்ஸைத் தான். சரி, ஓட்ஸை தினமும் சாப்பிடலாமா? உண்மையிலேயே ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவுமா? ஓட்ஸை தினமும் சாப்பிட்டால் உடலில் என்னவெல்லாம் நடக்கும் என்பன போன்ற உங்களது அனைத்து கேள்விகளுக்கும் இக்கட்டுரையில் பதில் கிடைக்கும்.

ஓட்ஸ் ஒரு முழு தானிய உணவுப் பொருள். ஒரு சிறிய கப் ஓட்ஸில் 13 கிராம் புரோட்டீன் உள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான அளவு மாங்கனீசு ஓட்ஸில் இருந்து, 100 சதவீதம் கிடைக்கும். ஓட்ஸில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஈ, செலினியம், பீனோலிக் அமிலங்கள், பைட்டிக் அமிலம் போன்றவை உள்ளது. மற்ற ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி1, காப்பர், பயோடின், மக்னீசியம், மாலிப்தீனம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன.

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இந்த கரையக்கூடிய நாச்சத்துக்கள் க்ளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்க உதவும். ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுக்கன், கொழுப்பு அளவைக் குறைக்கும். ஓட்ஸில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை தான் இதை ஆரோக்கியமானதாக்குகிறது.

சரி, இப்போது ஓட்ஸை தினமும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் குறித்து காண்போம்.

புரோட்டீன் அதிகரிக்கும்

8 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில் அன்றாடம் தேவையான புரோட்டீனில் 15 சதவீதம் கிடைக்கும். ஓட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் க்ளுட்டமைன் போன்றவை தசை நார்களை வேகமாக உருவாக்க உதவும். ஒரு கப் ஓட்ஸில் 3.4 மிகி இரும்புச்சத்து, 0.9 மிகி வைட்டமின் பி3 போன்றவை உள்ளது. இரும்புச்சத்து ஆக்ஸிஜனை இரத்தத்தின் வழியே கொண்டு செல்ல உதவுகிறது. இதில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டை ஆற்றலா மாற்ற உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஓட்ஸில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள், அரிப்பு, அழற்சி மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுக்கன், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதிலும் ஓட்ஸை சாப்பிடும் போது அத்துடன் ஆரஞ்சு ஜூஸைக் குடித்தால், உடலில் வைட்டமின் சி-யின் அளவு அதிகரிக்கும்.

ஆற்றல் அதிகரிக்கும்

ஓட்ஸில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்ற ஆற்றலை வழங்கும் பொரட்கள் அதிகமாக உள்ளது. ஓட்ஸில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், ரன்னிங் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு 3 மணிநேரத்திற்கு முன் உட்கொண்டால், உடலின் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்கலாம். ஏனெனில் ஓட்ஸ் மெதுவாக உடலில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் அளவை அதிகரித்து, உடற்பயிற்சியின் போது கொழுப்பை வேகமாக கரைக்கும். இதில் உள்ள கார்போஹைட்ரேட் காம்ப்ளக்ஸ் என்பதால், இது மெதுவாக செரிமானமாகி, உடலின் ஆற்றலை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும்.

எடை குறைய உதவும்

தினமும் ஓட்ஸை சாப்பிட்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும் மற்றும் எடையைக் குறைக்கச் செய்யும். ஒரு பௌல் ஓட்ஸை காலை உணவின் போது சாப்பிட்டால், அது பகல் நேரத்தில் அதிகளவு கலோரி எடுப்பதைத் தடுக்கும். இதன் விளைவாக உடல் பருமன் அடைவது தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் குறையும்

ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுக்கன் என்னும் நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஓட்ஸில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, ட்ரைகிளிசரைடுகளின் அளவு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இந்த சத்துக்கள் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, இரத்தக் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். இதன் விளைவாக தீவிரமான நோய்களான பெருந்தமனித் தடிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் அபாயமும் குறையும்.

இதய நோயின் அபாயம் குறையும்

ஓட்ஸில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்கள், இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் இதய செல்களுக்கு ஆதரவாக இருக்கும். ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களால் இரத்தக் குழாய் சுவர்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஓட்ஸில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்

ஒருவரது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு, தினமும் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்தை எடுக்க ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு சிறிய கப் ஓட்ஸில் ஐந்தில் ஒரு பங்கு நார்ச்சத்து உள்ளது. ஆகவே தான் நார்ச்சத்து ஆரோக்கியமான உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, குடலின் முறையான செயல்பாட்டை பராமரிக்க உதவும் மற்றும் அஜீரண பிரச்சனைகளில் இருந்து தடுக்கும்.

அழகான சருமம்

ஓட்ஸ் எக்ஸிமா போன்ற அழற்சி பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஓட்ஸில் உள்ள தனித்துவமான பண்புகள், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உட்பொருட்களை நீக்க உதவும். முக்கியமாக ஓட்ஸில் உள்ள இரும்புச்சத்து சரும செல்களுக்கு ஊட்டமளிக்கும். மாங்கனீசு வீக்கம் மற்றும் அழற்சியை நீக்கும். அதோடு காயங்கள், புண், அரிப்பு போன்றவற்றை சரிசெய்யும்.

குடல் புற்றுநோயைக் குறைக்கும்

ஓட்ஸில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். முக்கியமாக இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உணவுகள் மற்றும் கழிவுகளை வேகமாக நகர உதவும்.

கரையக்கூடிய நார்ச்சத்தானது நீரில் கரைவதால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். மேலும் கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சர்க்கரை நோயைத் தடுக்கும்

ஒட்ஸில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், சர்க்கரை நோயின் அபாயம் குறையும். ஓட்ஸ் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கும். ஆய்வு ஒன்றில், க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் டயட்டை மேற்கொண்டால், அது டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் மிகவும் மோசமானது. இது ஒருவருக்கு வந்துவிட்டால், அது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த அறிகுறிகள் எவ்வளவு பெரிய பிரச்சனையின் தீவிரமானவை என்று தெரியுமா?
Next article6 நாட்களில் சிறுநீரகத்தில் உள்ள‌ கற்களை முற்றிலும் கரைத்து வெளியேற்றும் அற்புத வழி!