உடல் எடையை குறைக்க டயட் பின்பற்றாமல் எடையை குறைக்க நீங்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டியவை!

0

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது பெரும் ஆபத்து அதனால் உடனடியாக எடையைக் குறைத்து விடுங்கள் என்று ஒரு பக்கம் மிரட்ட. உடல் எடையைக் குறைக்க நீங்கள் ரொம்பவே சிரமப்பட வேண்டும். டயட் மிகவும் முக்கியம், இதை மட்டும் சாப்பிட்டால் போதும் இவற்றையெல்லாம் ஒதுக்கிடுங்கள் என்று எக்கச்சக்கமான பட்டியல் நம் கைகளில் திணிப்பார்கள். அதை விட அதைச் செய்யுங்கள் இதைச்செய்யுங்கள் என்று எக்கச்சக்க கண்டிஷன்கள் வேறு.

உண்மையில் நமக்கு கொஞ்சம் பயமும் தொற்றிக் கொல்லும் உண்மையிலேயே இது அவ்வளவு பெரிய விஷயமா என்ற தயக்கத்துடன் பீதியும் நமக்கு இருக்கும். அவை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்திடுங்கள். முதலில் இதை இவ்வளவு காலம் மட்டும் செய்தால் போதும் அல்லது உடல் எடை குறையும் வரை மட்டும் செய்தால் போதும் என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். உடல் எடைக்குறைப்பு என்பது உங்களின் அன்றாட வாழ்க்கை முறை மாற்றமாக இருக்க வேண்டும். அப்போது தான் அதன் பலன் நீடித்து வருவதாக இருக்கும்.

நீங்கள் உடல் எடையை குறைக்கவென்று கடைபிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை சில நாட்கள் மட்டுமே கடைபிடிக்க முடியும். அதை விட்டதும் மீண்டும் உடல் எடை கூடிடும். சரி வேறு எப்படி தான் உடல் எடையை குறைப்பது? இதோ டயட் இல்லாது உங்களது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் அதனையே பழக்கப்படுத்தி பின்பற்றுவதன் மூலம் உங்களின் எடையை தாரளமாக குறைக்கலாம்.

தூக்கம் : மூளையை அமைதிப்படுத்தும் விஷயம் தூக்கம் மட்டுமே. நாள் முழுவதும் வேலை செய்த டென்சன் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் அதையெல்லாம் நிறுத்தி அமைதிப்படுத்த வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் தூக்கத்திற்கு கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் ஆழ்ந்து தூங்கும் போது தான் உங்களுடைய உள்ளுறுப்புகள் எல்லாம் நன்றாக செயல்படும். குறிப்பாக செரிமானம் துரிதமாக நடக்கம். தூக்க குறைபாடு இருந்தால் அது உங்கள் ஹார்மோனை பாதிக்கும். அதோடு கோரிஸ்டால் உற்பத்தியை அதிகரிக்கும். இது இன்ஸுலின் சுரப்பை அதிகப்படுத்திடும்.

மென்று சாப்பிடுங்கள் : சாப்பிடும் உணவை அப்படியே முழுங்காமல் கடித்து மென்று சாப்பிடுங்கள். நீண்ட நேரம் மென்று சாப்பிடுவதால் அது குறைவான உணவை சாப்பிடும் போதே நிறைவான உணர்வைத் தந்திடும். அதோடு இது செரிமானத்தை துரிதமாக்கிடும்

உணவு கவனம் : நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துங்கள். என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் அதில் எவ்வளவு கலோரி நமக்கு கிடைக்கிறது? அந்த உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன போன்றவற்றை கவனித்துச் சாப்பிடுங்கள். சாப்பிடும் போது போன் நோண்டிக் கொண்டே சாப்பிடுவது, டிவி பார்த்துக் கொண்டே அல்லது புத்தகம் படித்துக் கொண்டே எல்லாம் சாப்பிடக்கூடாது. இப்படிச் செய்வதால் அளவின்றி எக்கச்சக்கமாக சாப்பிட்டு விடுவீர்கள். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.

அதீத சமையல் : உணவுப் பதார்த்தங்களை அதீதமாக சமைக்கப்பட்டது வேண்டாம். அதாவது முழுதாக எண்ணெயில் பொறித்த உணவு அல்லது அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படிச் செய்யப்படுவதால் அந்த உணவிலிருக்கும் சத்துக்கள் வெகுவாக குறைந்திருக்கும். அந்த உணவை எடுத்துக் கொள்வதன் முழு பலனும் உங்களுக்கு கிடைத்திருக்காது.

தானியங்கள் : கலோரி குறைவான உணவை எடுத்துக் கொள்வதுடன் முழுதானியங்கள், காய்கறி மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். காய்கறிகளில் அதிகப்படியான விட்டமின்ஸ், மினரல்ஸ்,ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் மற்றும் ஃபைபர் இருக்கிறது. தானியங்களில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும். அவை நீண்ட நேரம் பசியெடுக்காது.

காலை உணவு : நேரமில்லை என்றோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்த்துவிடாதீர்கள்.ஒரு நாளைக்குத் தேவையான எனர்ஜியை கொடுப்பது காலை உணவு தான். அப்போது தான் நீங்கள் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். காலை உணவை தவிர்த்தால் மதிய நேரத்தில் அளவுக்கு அதிகமான பசியெடுத்து அதிகமான உணவை உட்கொள்வீர்கள். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான உணவு உட்கொள்வதால் தொப்பை ஏற்படும். அதோடு காலை உணவினை தவிர்ப்பது உங்களின் மெட்டபாலிசத்தையே குலைக்கச் செய்திடும். இதனால் உங்களின் செரிமானம் முதற்கொண்டு எல்லா விஷயங்களுமே பாதிக்கப்படும்.

குறைந்த உணவு மற்றும் குறுகிய இடைவேளி : ஒரே நேரத்தில் மொத்தமாக உணவு சாப்பிடாமல் மூன்று வேலை சாப்பிடும் உணவை ஆறு வேலையாக பிரித்துக் கொள்ளுங்கள். நடுவில் ஏதேனும் சூப்,சாலட்,பழம்,நட்ஸ் போன்ற ஏதேனும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.அதே போல உணவு சாப்பிடும் போது வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

பழங்கள் : உணவு சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரம் முன்பு ஒரு கப் பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவு விரைவில் செரிமானம் ஆகும். அதோடு குறைவான உணவையே உங்களால் சாப்பிட முடியும்

இரவு உணவு சாப்பிடும் நேரம் : இரவு உணவை மிகத் தாமதமாக எடுத்துக்கொள்வதை தவிருங்கள். இரவு எட்டு மணிக்கு முன்பாக உங்களுடைய இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள். இரவு உணவுக்கு பிறகு ஹெர்பல் டீ குடிக்கலாம்.

லிக்விட் கலோரி : ஜூஸ் மற்றும் குளிரூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றினால் அதிகப்படியான கலோரி உங்கள் உடலில் சேரலாம். அதோடு தண்ணீர் தாகத்தையும் குறைத்திடும். இதனால் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி விடுவீர்கள். அதனை விடுத்து தண்ணீர் நிறையக் குடியுங்கள். உங்கள் உடலை எப்போதும் ஹைட்ரேட்டட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

ப்ரோட்டீன் உணவுகள் : ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளையே உங்களின் உணவு மற்றும் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளுங்கள். அது சாப்பிட்டவுடன் நிறைவான தன்மையை கொடுக்கும். அதோடு நீண்ட நேரம் பசியெடுக்காது. இது நீங்கள் அதிகப்படியாக சாப்பிடுவதை தடுத்திடும்.

க்ரீன் டீ : உங்களின் மெட்டாபிலசத்தை அதிகரித்திடும். அதோடு இதில் எக்கச்சக்கமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. க்ரீன் டீ குடிப்பதினால் வாரத்தில் 400 கலோரிகள் கூடுதலாக எரிக்கப்படுகிறது.

சிரிப்பு : டயட் இல்லாமல் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கடை பிடிக்க வேண்டிய மிக முக்கியமான வழி இது. சிரிக்க வேண்டும். ஆம், வாய் விட்டு சிரிக்க வேண்டும். சிரிப்பது உங்களின் இதயத்துடிப்பை சீராக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், அடிவயிற்று தசைகளை தளர்த்திடும். ஒரு நாளைக்கு ஐந்து முறை நன்றாக வாய்விட்டு சிரிப்பது நீங்கள் 10 நிமிடம் ரோவிங் மெஷினில் உடற்பயிற்சி செய்ததற்கு சமம். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரையில் தொடரும் சிரிப்பு ஐம்பது கலோரிகளை அழித்திடும்.

மூச்சு விடும் போது : மூச்சு ஓர் அன்னிச்சையான செயல் என்று அதனை யாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. ஆனால் நீங்கள் சரியான முறையில் மூச்சு விடுவது கூட கலோரிகளை குறைக்க உதவுகிறது. சரியான முறையில் மூச்சு விடுவதை Diaphragmatic breathing என்பார்கள். அதாவது மூக்கு வழியாக மூச்சை உள் இழுத்து வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். அன்றாடம் இது சாத்தியமில்லை என்றாலும் ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து நிமிடங்கள் இப்படிச் செய்யலாம்.

ஆப்பிள் : சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,ப்ரோக்கோலி போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும். அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும். எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

டயட் தேவையா? டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும். ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனிமேல் இந்த மாதிரியா படுத்து தூங்காதீங்க! தூங்கினா ஆபத்தாம்!
Next articleநம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! நம்புவீர்களா!