பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் கொழுப்பு மிக்க உணவுகளினால் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கிறது.
இதனால் உடல் பருமன் அதிகரிப்பதுடன் பல நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகின்றோம்.
எனவே காய்கறி வகையை சேர்ந்த வெங்காயம் மற்றும் பழங்கள் வகையைச் சேர்ந்த ஆப்பிள் இவை இரண்டையும் தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொங்கும் தொப்பையைக் குறைக்கிறது.
பொதுவாக காய்கறி மற்றும் பழங்களில் ஏறத்தாழ 6000-திற்கும் மேற்பட்ட ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன.
எனவே உடல் எடையை குறைப்பதில், ஃபிளாவனாய்டுகளின் ஆற்றலில் மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஆப்பிள், வெங்காயம் மற்றும் கிரீன் டீயில், ஃபிளாவனாய்டுகள், காஃபின் மற்றும் ஆன்டியாக்ஸிடன்டுகள் போன்றவை உள்ளது.
இவைகள் நம்முடைய அதிகப்படியான உடல் எடையை குறைப்பதில் முக்கிய காரணிகளாக பயன்படுகிறது.
எனவே நாம் தினமும் சாப்பிடும் நம்முடைய அன்றாட உணவில் ஆப்பிள் மற்றும் வெங்காயம் ஆகிய இரண்டையும் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் எடை குறைப்பதுடன், தொங்கும் தொப்பையையும் குறைத்து, ஸ்லிம்மான உடலமைப்பை பெறலாம்.