உடலை சுத்தம் செய்யும் எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை சேர்த்து குடித்தால் தீரும் நோய்கள்!

0

உடலை சுத்தம் செய்யும் எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை சேர்த்து குடித்தால் தீரும் நோய்கள்.

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த எலுமிச்சையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவர் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். இது உண்மையே. ஆனால் எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை சேர்த்து குடித்து வந்தால், நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா?

ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஏராளமான இயற்கை வழிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் பழங்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்று சேரும் போது, உடலினுள் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ப்ரீ ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் தாக்கத்தைத் தடுக்கும். சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா, ஒரு மருந்துப் பொருளாக கருதப்படுகிற. இதை பலர் செரிமான பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்துவார்கள். மேலும் இது உடலில் pH அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது அதை சரிசெய்யவும் உதவும்.

சரி, இப்போது எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இந்த பானத்தைத் தயாரித்துக் குடியுங்கள்.

எலுமிச்சை பேக்கிங் சோடா பானம்

1.ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.

2.இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

3.ஒருவேளை இந்த பானத்தை ஒருவர் பகல் வேளையில் குடித்தால், இந்த பானம் உடலினுள் சிறப்பாக செயல்படாமல், எதிர்பார்த்த நன்மைகளை வழங்காது.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றின் நன்மைகள்

பேக்கிங் சோடாவை எலுமிச்சை ஜூஸில் கலந்து குடிப்பதால் வளர்சிதை மாற்ற செயல்பாடு சிறப்பாக நடைபெறும், உடலில் pH அளவு சீராக பராமரிக்கப்படும், குடல் ஆரோக்கியமாக இருக்கும், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும், புற்றுநோய் அபாயம் குறையும், இதய அரோக்கியம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும்.

சீரான pH அளவு
பெரும்பாலான மக்கள் தங்களின் உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் pH அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். இதை பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை கலவை சிறப்பாக செய்யும். இதில் உள்ள அல்கலைசிங் ஏஜென்ட், அமில அளவைக் குறைத்து, நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றைக் குறைக்கும்.

எடை குறைவு
பேக்கிங் சோடா, எலுமிச்சை மற்றும் எடை குறைவிற்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவை உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடற்பயிற்சியின் போது சிறப்பாக ஈடுபட செய்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க எலுமிச்சை, பேக்கிங் சோடா பானத்தைக் குடித்தால் மட்டும் போதாது, அத்துடன் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

சுத்தப்படுத்தும் பண்புகள்
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. பொதுவாக சாதாரண எலுமிச்சை ஜூஸைக் குடித்தாலே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒருவரது சிறுநீரின் வழியே தான் டாக்ஸின்கள், உப்புகள், கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான நீர் போன்றவை வெளியேறும். அதிலும் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தை ஒருவர் குடித்தால், சிறுநீரகங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறைவதோடு, உடலில் டாக்ஸின்களின் அளவு குறைந்து, உடல் சுத்தமாகவும், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வாய் பராமரிப்பு
பலரும் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானம் பற்களுக்கு தீங்கை விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த கலவையை ஒருவர் தினமும் குடித்தால் தான் பற்களின் எனாமல் பாதிக்கப்படும். ஆனால் அவ்வப்போது குடித்தால், அது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, வாயில் உள்ள அமில அளவைக் குறைக்கும்.

செரிமானம் மேம்படும்
பேக்கிங் சோடா எலுமிச்சை பானம், மிகச்சிறந்த ஆன்டாசிட்டாக செயல்பட்டு, அஜீரண பிரச்சனைகள், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை விரைவில் தடுக்கும். மேலும் இந்த பானம் குடலில் உள்ள அழற்சியைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதய ஆரோக்கியம்
ஆய்வு ஒன்றில் நீரில் பேக்கிங் சோடா கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. நீருடன் கலந்து குடிக்கும் போதே, இவ்வளவு நன்மையைக் கொடுக்கிறதே, அப்படியெனில் எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்து குடித்தால், எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசியுங்கள்.

சரும பராமரிப்பு
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். குறிப்பாக எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது முதுமையைத் தள்ளிப் போட்டு, சரும சுருக்கத்தைக் குறைத்து, சரும அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோயைத் தடுக்கும்
எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். ஏனெனில் எலுமிச்சையில் கார்சினோஜெனிக் செல்களை எதிர்க்கும் பொருள் உள்ளது. அதோடு இந்த கலவை உடலுக்கு கொடுக்கப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்
எலுமிச்சையில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இது குடல் மற்றும் உடலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிருமிகள் அல்லது ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அதாவது இந்த பானத்தை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்து, உடலைத் தாக்கும் நோய்களின் அளவும் குறையும்.

குறிப்பு
பேக்கிங் சோடா மருந்துப் பொருளாக கருதப்பட்டாலும், இது உடலில் அமில அளவைக் குறைத்து கார அளவை அதிகரிப்பதால், எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவைக் கலந்து குடிக்கும் முன், உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா!
Next articleபப்பாளி விதைகளை தூக்கி எறியாதீங்க! பழத்தை சாப்பிடுவதைவிட விதைகளில் தான் சத்துக்கள் அதிகம்.