இந்த ஒரு டம்ளர் ஜூஸ் எலும்புகளை வலிமைப்படுத்தும் எனத் தெரியுமா?

0
2350

இங்கு எலும்புகளின் வலிமையை இயற்கையாக அதிகரிக்க உதவும் ஓர் மருத்துவ குணமிக்க அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமாகும். எலும்புகள் பலவீனமாவதால், பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மனித எலும்பு அமைப்பு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர, உடலுறுப்புக்களைப் பாதுகாக்க என முக்கிய செயல்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது.

இத்தகைய எலும்புகள் இரத்த செல்களின் உற்பத்திக்கும், கனிமச்சத்துக்களை சேமிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. எலும்புகள் மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிப்பதால், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது.

ஒருவருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது நோய்கள் வருவதற்கு மோசமான டயட், உடலுழைப்பு இல்லாமை, நோய்த்தொற்றுகள், பரம்பரை போன்றவை காரணங்களாகும். மேலும் குறிப்பிட்ட சில நோய்களின் அறிகுறியாகவும் எலும்பு பிரச்சனைகள் உள்ளது. இங்கு எலும்புகளின் வலிமையை இயற்கையாக அதிகரிக்க உதவும் ஓர் மருத்துவ குணமிக்க அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
அன்னாசி ஜூஸ் – 1/2 கப்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

அன்னாசி
அன்னாசியில் வைட்டமின் டி ஏராளமாக உள்ளது. உடலில் வைட்டமின் டி போதுமான அளவில் இருந்தால் தான், எலும்புகளால் கால்சியத்தை எளிதில் உறிஞ்சி, வலுப்படுத்த முடியும்.

தேன்
தேனில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எலும்புகளில் உள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும்.

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள 2 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி 2-3 மாதங்கள் குடித்து வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

குறிப்பு
என்ன தான் எலும்புகளை வலிமைப்படுத்துவதற்கு என்று பானம் இருந்தாலும், அதோடு அன்றாடம் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்து வர வேண்டியதும் அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: