உங்க தலைமுடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி குறைந்து இருக்கா ! முடி உதிர்தலால் மன உளைச்சலா ! இவற்றை செய்து பாருங்கள் !
அறிகுறிகள்: தலைமுடி வளர்ச்சி இல்லாமை.முடி உதிர்தல்.
தேவையானவை: நல்லெண்ணெய். சடா மஞ்சள்
செய்முறை: சடாமஞ்சளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளரும்.
அறிகுறிகள்: முடி கொட்டுதல்.
தேவையானவை: பூசணி இலை.
செய்முறை: பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடங்களில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், தினமும் ஒரு கால் டீஸ்பூனாவது ஸ்கால்ப்பில் இருக்கும்படி பார்த்து கொண்டால் தலை சூட்டினால் முடி உதிர்வதை தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளரும். இதற்கு அருமையான தீர்வு ஆயுர்வேத வழிமுறையே ஆகும், முடி அடர்த்தியை அதிகரிக்க கீழ்வரும் முறைகளை கையாளுவோம்.
வெந்தயம் மற்றும் சீரகம்
வெந்தயம் மற்றும் சீரகத்தை இரவே ஊற வைத்து, அதனை மறு நாள் ஊற வைத்த நீருடனே அரைத்து தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும், இவ்வாறு வாரம் இரு நாட்கள் அல்லது தினமுமே செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை அல்லது வாரம் இருமுறை செய்து வந்தால் முடி அடர்த்தி பெறும்.
கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் கற்றாழை ஜெல்லை நன்றாக கலக்கி தலையில் தடவுங்கள், சில நிமிடங்கல் மசாஜ் செய்யவும்.
ஒரு மணிநேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள், இது கூந்தலுக்கு மென்மையை தந்து நல்ல கண்டிஷனராக விளங்குகிறது.
விளக்கெண்ணெய் மற்றும் தேன்
விளக்கெண்னெயை சூடுபடுத்தி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள், இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணிநேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள், இவ்வாறு வாரம் 2 முறை செய்வதனால் முடி வழுவடைந்து அடர்த்தியாக வளரும்.
கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
கருவேப்பிலையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் என்ணெயை சூடுபடுத்தி, அதில் கருவேப்பிலை விழுதைப் போட்டு சலசலப்பு அடங்கும் வரை குறைந்த தீயில் வைக்கவும். ஸபின்னர் அடுப்பை அணைத்து, லேசாக சூடு ஆறியதும் அதனை தலைமுழுவதும் தடவ வேண்டும், பின் 5 நிமிடங்கள் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் ஒருநாள் இதை தொடர்ந்து செய்து வந்தால் இளநரையையும் போக்கி கூந்தல் அடர்த்தியாக வளரும்.
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.
சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும்.
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.
By: Tamilpiththan