உங்கள் ராசி என்ன? இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்!

0
1135

ஒவ்வொருவரும் தனது ராசிக்கு ஏற்றவாறு நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்த பின் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கினால் அது அவர்களுக்கு நிலையாக இருக்கும்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் ஞாயிறு, வெள்ளி போன்ற கிழமைகளில் தங்க ஆபரணங்கள் வாங்குவது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஆபரணங்கள் வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் தங்க நகைகளை வாங்குவது சிறப்பானது.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் தங்கத்தை வாங்கலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் நகைகளை வாங்கினால் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி கிழமை மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதனால் சனிக் கிழமை நகைகள் வாங்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமாகும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி உள்ளவர்கள் சனிக் கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசி உள்ளவர்கள் வியாழன் கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மகரம்

மகரம் ராசி உள்ளவர்கள் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் வியாழன், திங்கள் ஆகிய நாட்களில் ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: