கடன் சுமையில் இருந்து தப்புவது எப்படி..? உங்கள் ராசி என்ன சொல்லுகிறது..?

0

பணம் நமது மேல் கருணையே காட்டுவதில்லை என நீங்கள் நினைப்பதுண்டா? அப்படியானால் உங்கள் ராசிபலனை ஒருமுறை பார்ப்பது சில இரகசியங்களை உங்களுக்குத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ராசி உங்கள் பணத்தை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் காதல்/அன்பு மற்றும் தொழில்/பணி போன்றவற்றுடன் இதற்குள்ள தொடர்பைத் தவிர உங்கள் ராசிகள் நீங்கள் பணத்தை எவ்வாறு நிர்வாகம் செய்வீர்கள் என்பதற்கான தொடர்பையும் தெரிவிக்கின்றன.
சரி இனி பல்வேறு ராசிக்காரர்கள் பணத்தை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதுடன் கடனில் மூழ்காமல் தப்புவது எப்படி என்பதையும் பார்க்கலாம்.

மேஷம்

இவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் துடிப்பவர்கள். அப்படியானால் பணம் என்று வரும்போது இவர்கள் அதிக நெருக்கடிகளுக்குத் தயாராயிருப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி, கடனை எளிதில் வசூலிப்பார்கள். திட்டமிட்டுச் சேமிப்பது இவர்களுக்குச் சற்று கடினமென்றாலும், இவர்கள் ஓரளவுக்கு அதை செய்யக் கூடியவர்கள். மேஷ இராசிக்காரர்கள் பெரும் கடன்களில் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கப் படுகிறார்கள்.

ரிஷபம்

ரிஷப இராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருக்கும் அதே நேரம் உறுதி படைத்தவர்கள். பொதுவாகச் சிக்கனமாக இருக்கும் இவர்கள் எதிர்காலத்திற்குச் சேர்த்துவைக்க முடியும். ஆனால் அவர்கள் தன்னிச்சையாக அதிகம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபாடு கொண்டால் அது அவர்களின் நிதி நிலையைப் பாதிக்கும். இவர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறந்ததாக இருக்கும்.

மிதுனம்

இவர்கள் பணத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். இதனால் இவர்களால் சொத்துக்கள் சேர்க்க முடிவதில்லை. மிதுன இராசிக்காரர்கள் நீண்டகால முதலீடுகளையும் பொறுப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.

கடகம்

கடக இராசிக்காரர்கள் பண விசயத்தில் கெட்டிக்காரத் தனமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தங்களுடைய சேமிப்புகளைச் சார்ந்திருப்பது நல்லது என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சிம்மம்

சிம்ம இராசி உடையவர்கள் ஆடம்பரங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு பண விவகாரங்களில் அதற்கான திறமை, குறிக்கோள் மற்றும் போட்டித் திறன் இருக்கும். ஆனால் பணத்தை சேமிப்பது இவர்களுக்குக் கடினமான ஒன்று.

கன்னி

கன்னி இராசி அமைப்பின் படி, இவர்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள சேமிக்க முடியும். பண விவகாரங்களில் மிகவும் நுணுக்கமாகவும் முதலீடுகளில் சிக்கனமாகவும் இருப்பார்கள். எப்போதாவது சேமிப்பது இவர்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.

துலாம்

துலாம் இராசிக்காரர்கள் எளிதில் இசைந்து கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் நிதி முடிவுகளில் மந்தமாக இருப்பர். இவர்கள் அதிகம் செலவு செய்யக்கூடியவர்கள் என்பதால் நிதி ஆலோசனைக்கு ஒருவரை வைத்துக் கொள்வது அவர்களின் திட்டங்களை திறம்படத் தீட்டி அதை அடைய உதவியாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக இராசிக் காரர்கள் பண விவகாரங்களில் இரகசியத்தைப் பேணுபவர்கள் என்பதுடன், முதலீடு மற்றும் செலவுகளில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். நிதியையும் அவர்களால் திறம்பட நிர்வகிக்க முடியும்.

தனுசு

இவர்களின் நேர்மறை சிந்தனை மற்றும் செயல்பாடு இவர்களை நிதி சார்ந்த விஷயங்களில் பொறுப்பில்லாமல் ஆக்கக் கூடும். இவர்கள் திறமையானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள் என்றாலும் செலவாளிகளாகிவிட வாய்ப்புள்ளது.

மகரம்

மகர இராசிக் காரர்கள் நிதிக் கொள்கையில் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்பதுடன் மிகவும் உறுதியானவர்களும் கூட. இவர்கள் நீண்ட காலத்தில் பயன்தரும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தல் நலம்.

கும்பம்

கும்ப இராசிக் காரர்கள் நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமான அவசியமான ஒன்றாகச் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலும் இவர்கள் முதலீட்டு மற்றும் சேமிப்பு முடிவுகளை எடுக்கமுடியாதவர்களாக இருப்பதுதான்.

மீனம்

மீன இராசிக்காரர்கள் பண நிர்வாகத்தில் மிகவும் கொள்கை சார்ந்தவர்களாகவும் பொதுவான போக்கை உடையவர்களாகவும் இருப்பர். இதனால் அவர்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்படலாம். எனவே அவர்கள் பணப்பரிமாற்றங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 30.6.2018 சனிக்கிழமை !
Next articleநீண்ட தூரப் பயணம் செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா?