உங்களுக்கு தெரியுமா! ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசிக்கும் இளம்பெண் எழுதியிருப்பது ஐ.ஏ.எஸ் தேர்வு!

0
344

வாழ்வின் சகல சவுகர்யங்களையும் பெற்றவர்களே அடிசனல் ஆசை எதையாவது வைத்துக்கொண்டு புலம்பி வருவதை நாள்தோறும் பார்க்கிறோம். ஆனால் அவ்வப்போது தங்களது அபார தன்னம்பிக்கையால் நம்மை வியப்பின் விளிம்புக்கே கொண்டுசெல்லக்கூடிய மனிதர்களும் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

கேரளாவில் எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வு எழுதியுள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் லதீஷா அன்சாரி. பிறக்கும் போதே மிகவும் அரிதான எலும்பு நோயால் பாதிக்கப்பட்டார். மிகவும் சிரமப்பட்டே அவர் வளர்க்கப்பட்டார். பள்ளி பருவத்தில் அவரது தந்தை மிகவும் உதவியாக இருந்தார். நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட லதீஷாவால் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் எந்தவொரு செயலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், லதீஷாவும் அவரது கணவர் ஷெஹினும் யுபிஎஸ்சி எனப்படும் ஐஏஎஸ் தேர்வை இன்று எழுதினர். திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் லதீஷா அன்சாரி மற்றும் ஷெஹின் இருவரும் தேர்வு எழுதினர். தன்னுடைய வழக்கமான சக்கர நாற்காலியின் பின் புறத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொறுத்தப்பட்ட நிலையில் லதீஷா தேர்வு எழுதினார்.

லதீஷாவுக்கு இது முதல் தேர்வு. ஷெஹினுக்கு இது மூன்றாவது முறை. லதீஷாவை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுத உதவிய கோட்டயம் மாவட்ட ஆட்சியருக்கு அவரும் அவரது தந்தையும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

லதீஷா மிகவும் அழகாக ஓவியங்கள் வரையும் திறமையும் கொண்டவர். 4 வயது முதலே ஓவியங்கள் வரையும் பழக்கம் கொண்டவராக இருந்து வருகிறார்.

பியானோ வாசிக்கவும் செய்கிறார்.அவர் பியானோ வாசிக்கும் அழகை இந்த வீடீயோவில் பாருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்மாடியோவ் எவ்வளவு அழகு! கர்ப்பமான புகைப்படத்தை மீண்டும் வெளியிட்ட சுஜா வருணி!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 04.06.2019 செவ்வாய்க்கிழமை !