உங்களின் பிறந்த நேரத்தின் படி உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா!

0

இந்து மதத்தில் ஒருவரின் பிறந்த நேரம் என்பது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஏனெனில் அவர்கள் பிறந்த நேரத்தை வைத்துதான் அவர்களின் ராசி, நட்சத்திரம், ஜாதகம் என அனைத்தும் கணிக்கப்படுகிறது. இதனை பொறுத்தே நமது வாழ்க்கையின் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஜாதகம் இன்றி நீங்கள் பிறந்த நேரத்தை வைத்தே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். உண்மைதான், நீங்கள் பிறந்த நேரத்தை மட்டும் வைத்து உங்களின் குணநலன்கள், பழக்கவழங்கள் முதல் உங்கள் எதிர்காலம் வரை அனைத்தையும் கணக்கிடலாம் என்று வேதங்கள் கூறுகிறது. அதன்படி நீங்கள் பிறந்த நேரம் உங்களின் எதிர்காலத்தை பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகாலை 04:00 – 06:00
அதிகாலை நேரமான 4 மணி முதல் 6 மணிக்குள் பிறந்தவர்களின் ஜாதகத்தின் முதல் வீட்டில் சூரியபகவான் நிரந்தரமாக இருப்பார். உங்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய பிரச்சினைகள் வரும், உங்களின் தன்னம்பிக்கையை பார்த்து பலரும் பொறாமைப்படுவார்கள். உங்களின் எதிர்காலம் சூரியனை போல பிரகாசமாக இருக்கும், உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் சற்று தாமதமாக கிடைக்கலாம் ஆனால் உங்களின் முயற்சியால் அவை எப்படியும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

காலை 06:00 – 08:00
இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியபகவான் 12வது வீட்டில் இருப்பார். அதனால் உங்கள் வாழ்க்கையில் பல மர்மமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் வாழ்க்கை சுவாரசியமடையும், இதனால் எதிர்பார்க்காத முடிவுகள் ஏற்படும். அமைதியான உங்கள் மனம் எப்பொழுதும் ஒழுக்கமான வாழ்க்கைமுறையையே வாழ விரும்பும். உங்களின் செலவுகளே உங்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும், எனவே நன்கு யோசித்து மமுதலீடு செய்யுங்கள்.

காலை 08:00 – 10:00
இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் நிரந்தரமாக 11வது வீட்டில் இருப்பார். இதன்படி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகள் அனைத்தும் உங்கள் நிதி நிலையை பொறுத்தே அமையும். உங்கள் வாழ்க்கையில் பணம் முட்ட முக்கியமான பங்காற்றும். நீங்கள் நினைத்தது நடக்காதபோது அதீத மனஅழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்களின் பொறுமைதான் கடினமான சூழ்நிலைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.

முன்பகல் 10:00 – 12:00
காலை நேரத்தின் இறுதி முடிவில் பிறந்த இவர்களின் ஜாதகத்தில் சூரியன் 10வது இடத்தில் நிரந்தரமாக வசிப்பார். சூரியன் இருக்கும் மிகவும் வலிமையான இடம் இதுதான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தான் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை தட்டிச்செல்வார்கள். இவர்கள் மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள், அதற்காக மற்றவர்களால் பாராட்டவும் படுவார்கள். உங்கள் அதிகாரத்தை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துவது உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பகல் 12:00 – 02:00
நண்பகலில் பிறந்த இவர்களின் ஜாதகத்தில் சூரியன் ஒன்பதாவது இடத்தில் வசிப்பார். இதனால் உங்கள் வாழ்க்கை பயணங்கள் நிறைந்ததாக இருக்கும். அது தனிப்பட்ட பயணமாகவும் இருக்கலாம், அலுவலக பயணமாகவும் இருக்கலாம். அவர்களின் அழகான தோற்றமும், புத்திக்கூர்மையும் கூடுதல் சிறப்புகளை அவர்களுக்கு பெற்றுத்தரும். உங்கள் வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டமும், பாராட்டுக்களும் உங்கள் கூடவே வரும்.

பிற்பகல் 02:00 – 04:00
பிற்பகல் நேரத்தில் பிறந்த இவர்களின் ஜாதகத்தில் சூரியன் எட்டாவது இடத்தில் வசிப்பார். நீங்கள் பணம் தொடர்பான துறையில் வேலை செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதிலும் அதிக பொறுப்பு வாய்ந்த நிலையில் இருப்பீர்கள். சூரியன் இருக்கும் இந்த இடம் உங்கள் பாலியல் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. வாழ்க்கையின் ஒருசில காலக்கட்டத்தில் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மாலை 04:00 – 06:00
இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் ஏழாவது இடத்தில் வசிப்பார். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் எப்பொழுதும் அதிக பொறுப்புகள் நிறைந்த இடத்தில் இருப்பார்கள். கல்யாணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்காக பின்வாங்காதீர்கள், எனவே அதிக முயற்சி செய்யுங்கள். அதிக பேச்சு தொடர்பான வேலைகளில் பணிபுரிவது உங்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். அதேசமயம் உங்களுக்கு அதிக எதிரிகள் இருக்கவும் வாய்ப்புள்ளது.

06:00 – 08:00
மாலை நேரத்தில் பிறந்த உங்களின் ஜாதகத்தில் சூரியன் ஆறாவது இடத்தில் வசிப்பார். அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகள் உங்களின் நெருங்கிய நண்பர்களை பொறுத்தும், அவர்களுடனான உங்களின் நட்பை பொறுத்தும்தான் அமையும். குடும்பம் உங்களுக்கு இரண்டாவது இடம்தான் சமூக வாழ்க்கையே உங்களுக்கு மிகவும் முக்கியம். சமூக சேவையில் அக்கறை கொண்டவராக இருப்பீர்கள். உங்களின் எச்சரிக்கை உணர்வும், கடின உழைப்பும் உங்களை வாழ்வின் உயரத்திக்கு அழைத்து செல்லும்.

இரவு 08:00 – 10:00
இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் ஐந்தாவது இடத்தில் வசிப்பார். அதன்படி உங்களுக்கு கற்பனைத்திறன் மிகவும் அதிகமாக இருக்கும். இதுவே உங்களின் ஆளுமைக்கான சிறந்த சான்றாகும். உங்களுக்கு பிடித்த துறையில் வேலை செய்யும்போதுதான் நீங்கள் நினைத்த உயரத்தை அடைவீர்கள். வெற்றியும், புகழும் உங்களை தேடிவரும், ஆனால் மற்றவர்களின் அறிவுரைக்கு மதிப்பு கொடுங்கள், இல்லையெனில் அதுவே உங்களை பிரச்சினையில் சிக்கவைக்கும்.

இரவு 10:00 – 12:00
இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் நான்காம் இடத்தில் வசிப்பார். அதன்படி நீங்கள் எப்பொழுதும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டீர்கள். நிலம் தொடர்பான வியாபாரம் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் வெற்றி மற்றும் தோல்விகளுக்கு நீங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாகமாட்டிர்கள்.

நள்ளிரவு 12:00 – 02:00
நீங்கள் நள்ளிரவிற்கு பிறகு பிறந்திருந்தால் உங்கள் ஜாதகத்தில் சூரியன் மூன்றாவது இடத்தில் வசிப்பார். அதன்படி அதிக புத்திகூர்மை வாய்ந்த நீங்கள் சாகசங்களையும், பயணங்களையும் விரும்புபவராக இருப்பீர்கள். நீங்கள் மீடியா தொடர்பான பணிகளில் இருப்பது நல்லது. உங்களின் உறவினர்களும், உடன்பிறந்தவர்களும் உங்கள் சுபாவத்தில் பல மாற்றங்களை கொண்டுவர முயற்சிப்பார்கள், எச்சரிக்கையாய் இருங்கள். மகிழ்ச்சிகரமான சமூக வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.

அதிகாலை 02:00 – 04:00
இந்த நேரத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் இரண்டாவது வீட்டில் வசிப்பார். இது குடும்பம் மற்றும் நிதிநிலைமைக்கான இடமாகும். இந்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டாவது வீடு உணவு மற்றும் சமையலுடன் தொடர்புடையதாகும். உங்கள் பிறந்த நேரம் இதுவாக இருந்தால் நீங்கள் உணவு தொடர்பான துறையில் முன்னேற நிறைய வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ராசிக்காரர்கள் சரியான ஓட்டைவாயாக இருப்பார்கள்! இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லிவிடாதீர்கள்!
Next articleபரிகாரம் எல்லாம் வேண்டாம் ரூ.40 லட்சம் கொடு பரிகாரம் கூறிய ஜோதிடருக்கே அடி உதை மிரட்டல் அதிர்ச்சியளித்த தம்பதி!