இளம் சகோதரியின் ரகசியத்தை கண்டுபிடித்த 3 சகோதரர்கள்! ஆத்திரத்தில் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!

0
350

இந்தியாவில் சகோதரியை கொடூரமாக தாக்கி அவர் மீது ஆசிட் வீசிய மூன்று சகோதரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இர்பான் (27), ரிஸ்வான் (22), இம்ரான் (24) ஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவார்கள்.

மூன்று பேரும் சேர்ந்து கடந்த மாதம் 5ஆம் திகதி தங்களது சகோதரி சல்மா (22) மீது ஆசிட் வீசியதோடு, அவரை கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சல்மாவுக்கு ஆசிட் வீச்சு காரணமாக கண்பார்வை பறிபோனது.

மேலும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் பொலிசார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், ஏற்கனவே திருமணமான கோடீஸ்வர இளைஞர் ஒருவருடன் சல்மா ரகசியமாக பழகி வந்தார்.

இதை நாங்கள் கண்டித்தும் அவர் பழக்கத்தை விடவில்லை, இதையடுத்தே ஆத்திரத்தில் அவர் மீது ஆசிட் வீசினோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article17 வயது சிறுமியை உயிருடன் விழுங்க பார்த்த சுறா மீன்! அதனுடன் போராடிய அவரின் தந்தை! இறுதியில் நடந்தது என்ன!
Next articleமுஸ்லிம் அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முன் என்ன நடந்தது! தமிழ் அமைச்சர் தகவல்!