இலங்கைத் தமிழருக்கு பிரான்சிற்கு பயணமான போது நேர்ந்த கதி!

0
235

மலேசிய கடவுச் சீட்டை பயன்படுத்தி பிரான்சிற்கு செல்ல முயற்சித்த இலங்கைத் தமிழர் ஒருவர் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை தமிழர் பிரபு தர்மலிங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தாய்லாந்தின் தென் பகுதியின் ஊடாக செப்டம்பர் 13ஆம் திகதி அந்த நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உள்ளானவர் அல்ல என்று விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாய்லாந்தில் இந்த வருடத்தில் மாத்திரம் போலியான கடவுச்சீட்டுக்களுடன் இலங்கையர்கள் உட்பட்ட 45 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: