இரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் உணவுகள்!

0
698

ஆரோக்கியமான உடலுக்கும் வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான இதய அமைப்பு தேவை. இன்றைய உலகில் அமைதியற்ற வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவு பழக்கத்தால் பலரும் இதய பாதிப்பை அடைகின்றனர்.

40 வயதிற்கு மேல் பலருக்கும் அபாயகரமான இதய நோய்கள் வருவது சா்வ சாதாரணமாக இருக்கிறது.

தமனிகளின் அடைப்பு :

இரத்தத்தில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் உண்டாகும்போது அவை தமனிகளில் தான் சேருகின்றன, இதனால் தமனி குறுகலாகி இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது தமனிகளின் சுவர்கள் முற்றிலும் அடைக்கப்பட்டு, இதயத்திற்கு பாதிப்பை தருகின்றன.

தமனிகளின் அடைப்பை சரிசெய்யும் உணவுகள் பற்றிய இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பழங்கள் 

ஒவ்வொரு பழத்திலும் இருக்கும் வெவேறு ஊட்டச்சத்துகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் . இதனால் தமனியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் பெக்டின் எனும் கூறு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது மற்றும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. தமனியில் சுவர்கள் இந்த பழத்தால் வலிமையாகின்றன. பழங்களும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாகும்.

இஞ்சி மற்றும் பூண்டு

இஞ்சி , பூண்டு ஆகியன இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, தமனிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தமனிகளின் அடைப்பிற்கு முக்கிய காரணமான வீக்கத்தை, இஞ்சி குறைக்கிறது.

அஸ்பாரகஸ் கிழங்கு

இந்த கிழங்கு உங்கள் இரத்த குழாய்களில் அடைத்து கொண்டிருக்கும் கொழுப்புகளை சுத்தம் செய்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து , தாதுக்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தம் உறைவதை தடுத்து இதய நோய்கள் வராமல் காக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடைப்பட்ட தமனிகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனேற்றத்தை சரி செய்கிறது. அழற்சிக்கு எதிராகவும் செயல்படுகிறது.

முழு தானியங்கள்

சுத்தீகரிக்கப்பட்ட மாவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் முழு தானியங்களை பயன்படுத்துவது இதயத்திற்கு சிறந்ததாகும் . கோதுமை, பார்லி, ராகி, கம்பு, சோளம் போன்றவை பரவலாக கிடைக்கும் தானியங்கள் ஆகும். இவற்றை பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நீங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை உணருவீர்கள்.

மசாலா பொருட்கள்

நமது தினசரி உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் இதை ஆரோக்கியத்திற்கான கூறுகள் உண்டு என்பதை யாரும் உணர்வதில்லை. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற கூறு கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்க்கிறது. இலவங்க பட்டை தமனி அடைப்பை தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தர்பூசணி

தர்பூசணிதர்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நமது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உருவாக்கி இரத்த குழாய்களில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது, இரத்தம் சீராக ஓட உதவும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் .

இன்று பலரும் உட்கார்ந்த நிலையில் வேலை பார்க்கும் சூழ்நிலையால் உடலில் கொலஸ்ட்ரால் சேருவதற்கான காரணமாகும். இதய ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தமனி மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: