இன்றைய ராசிபலன் 8.7.2018 ஞாயிற்றுக்கிழமை !

0
684

இன்றைய ராசிபலன் 8.7.2018 ஞாயிற்றுக்கிழமை !

8.7.2018 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 24-ம் நாள்.
தசமி திதி மாலை 6.53 வரை பிறகு பரணி நட்சத்திரம் அதிகாலை 4.06 வரை பிறகு கார்த்திகை. யோகம்: சித்த யோகம்.
குளிகை: 3:00 – 4:30
சூலம்: மேற்கு.
பொது: திருவண்ணாமலை, திருவையாறு தலங்களில் சிவபெருமான் அயன உற்சவாரம்பம்.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11.
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30.
இராகு காலம் மாலை மணி 4.30-6.00.

மேஷம் : ஏமாற்றம்
ரிஷபம் : வெற்றி
மிதுனம் : கவலை
கடகம் : லாபம்
சிம்மம் : நட்பு
கன்னி : தடங்கல்
துலாம் : மகிழ்ச்சி
விருச்சிகம் : தாமதம்
தனுசு : சுகம்
மகரம் : வரவு
கும்பம் : சிக்கல்
மீனம் : அசதி

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் புது முயற்சிகள் தள்ளிப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். போராட்டமான நாள்.

துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். புது நட்பு மலரும்-. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்-. உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.

மீனம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: