இன்றைய ராசிபலன் 20.10.2022 Today Rasi Palan 20-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 20-10-2022 ஐப்பசி மாதம் 03ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று தசமி திதி மாலை 04.05 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. இன்று ஆயில்யம் நட்சத்திரம் பகல் 10.30 வரை பின்பு மகம். இன்று சித்தயோகம் பகல் 10.30 வரை பின்பு அமிர்தயோகம். இன்று நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசிபலன்!

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசிபலன்!

இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுன ராசிபலன்!

இன்று உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடக ராசிபலன்!

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் மனசங்கடங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

சிம்ம ராசிபலன்!

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும்.

கன்னி ராசிபலன்!

இன்று உங்களுக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

துலா ராசிபலன்!

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்!

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.

தனுசு ராசிபலன்!

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மதியத்திற்கு பின் மன அமைதி இருக்கும்.

மகர ராசிபலன்!

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

கும்ப ராசிபலன்!

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீன ராசிபலன்!

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 31
Next articleApril 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil April 01