இன்றைய ராசிபலன் 19.10.2022 Today Rasi Palan 19-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 19-10-2022 ஐப்பசி மாதம் 02ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று நவமி திதி பகல் 02.14 வரை பின்பு தேய்பிறை தசமி . இன்று பூசம் நட்சத்திரம் காலை 08.01 வரை பின்பு ஆயில்யம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசிக்காரர்களுக்கு,

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு,

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு,

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு,

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

துலா ராசிக்காரர்களுக்கு,

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு,

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினை சற்று குறையும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மகர ராசிக்காரர்களுக்கு,

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு,

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

மீன ராசிக்காரர்களுக்கு,

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகப் பலன் கிட்டும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 25
Next articleMarch 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 26