இன்று 15-10-2022 புரட்டாசி மாதம் 28ம் நாள் சனிக்கிழமை ஆகும். இன்றைய நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. இன்று மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.21 வரை பின்பு திருவாதிரை. இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்: காலை 09.00-10.30, எம கண்டம்: மதியம் 01.30-03.00, குளிகன்: காலை 06.00-07.30, சுப ஹோரைகள்: காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசிபலன்!
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
ரிஷப ராசிபலன்!
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.
மிதுன ராசிபலன்!
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடக ராசிபலன்!
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
சிம்ம ராசிபலன்!
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும்.
கன்னி ராசிபலன்!
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
துலா ராசிபலன்!
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்கள் ராசிக்கு பகல் 10.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பிறகு மன அமைதி ஏற்படும்.
விருச்சிக ராசிபலன்!
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வெளி நபர்களிடம் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தள்ளி வைப்பது நல்லது.
தனுசு ராசிபலன்!
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
மகர ராசிபலன்!
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்ப ராசிபலன்!
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். கடன் பிரச்சினைகள் குறையும்.
மீன ராசிபலன்!
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.