இன்றைய ராசிபலன் 12.4.2018!

0
665

இன்றைய ராசிபலன் 12.4.2018

12.4.2018 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 29-ம் நாள்.
தேய்பிறை ஏகாதசி திதி காலை 7.21 வரை பிறகு துவாதசி. சதய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 2.25 வரை அதன் பிறகு பூரட்டாதி. யோகம்: மரணயோகம் மறுநாள் பின்னிரவு 2.25 வரை பிறகு சித்தயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் விருஷப சேவை, கோவில்பட்டி ஸ்ரீசுவாமி அம்பாள் குதிரை வாகனத்தில் திருவீதிவுலா, தண்டியடிகள் நாயனார் குருபூஜை.
பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.

மேஷம் : கடமை
ரிஷபம் : வரவு
மிதுனம் : உற்சாகம்
கடகம் : ஈகோ
சிம்மம் : சமயோஜிதம்
கன்னி : காரியம்
துலாம் : நிகழ்வு
விருச்சிகம் : அறிவு
தனுசு : திறமை
மகரம் : அமைதி
கும்பம் : நெருக்கடி
மீனம் : கவனம்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

துலாம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்: எளிதில் முடிய வேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். புதியவர்களை நம்பிஏமாற வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதுலாம் ! ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்!
Next articleஒரு பல் பூண்டு இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ! கொழுப்பு இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.