இன்றைய ராசிபலன் – இன்றைய நாள் எப்படி வியாழக்கிழமை, 7
மேஷம்:-தொட்டதெல்லாம் துலங்கும். பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
ரிஷபம்:-வெற்றி மேல் வெற்றி வரும். அரசு அதிகாரிகள் மூலமாக ஆகவேண்டிய வேலைகள், அனுகூலமான திசைகளில் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து, தேர்ச்சி அடைவர்.
மிதுனம்:-தெய்வபக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சுகமான சுற்றுலாப் பயண வாய்ப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கௌரவக் குறைவால் மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
கன்னி:-பாதைவிட்டு விலகுவர், பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழ, எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
மகரம்:-எதிர்பார்த்த தனவரவுகளில் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
கடகம்:-எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு இன்பம் தரும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
சிம்மம்:-வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பேச்சால் பெருமாளையும் அசத்திவிடுவீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்குக் கேட்கவேண்டுமா ? வாகன யோகம் உண்டு.
துலாம்:-ஆரோக்கியத்தைப் பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும்.
மீனம்:-பெண்களால் வெட்டிச் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம்.
தனுசு:-குவியும் வெற்றிகளால் சந்தோஷம் நிலவி, மனதில் தெம்பு ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:-வீண் அலைச்சல்களால் ஓய்வு குறையும். தெய்வமான அம்மாவின் தேக சுகத்தைப் பேண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இராது. புதிய முயற்சிகளைக் கைவிடுவது நல்லது.
கும்பம்:-பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வித் தரம் உயரும்.
இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017
ஆவணி
22
நல்ல நேரம்
காலை: 10:30AM – 11:30AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 1:30PM – 3:00PM
இரவு: 10:30PM – 12:00PM
எமகண்டம்
காலை: 6:00AM – 7:30AM
இரவு: 10:30PM – 12:00PM