முட்டையின் மஞ்சள் கரு இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிடாதீர்கள்!

0
4292

இந்த நிறத்தில் முட்டையின் மஞ்சள் கரு இருந்தால் சாப்பிடாதீர்கள்!

முட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது என்றால், அது ஆரஞ்சு நிறமுள்ள மஞ்சள் கரு தான்.

ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லது ஏன்?

முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம்.

இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து, சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே நாம் அன்றாடம் சாப்பிடும் முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது.

மேலும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மஞ்சள் கரு இருந்தாலும், அது நல்லது. ஏனெனில் அது ஆர்கானிக் முட்டை என்று கூறலாம்.

மஞ்சள் நிறத்தில் உள்ள மஞ்சள் கரு ஆபத்தா?

முட்டையின் மஞ்சள் கருமஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நல்லதல்ல. ஏனெனில் அவை முற்றிலும் குறைவான தரம் கொண்டவை. அந்த முட்டை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கப்பட்டதாகும்.

தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்?

தினமும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம். அதுவே மஞ்சள் கருவை சாப்பிடுவதாக இருந்தால், தினமும் 1 முட்டை சாப்பிட்டால் போதும்.

கடுமையான ஜிம் பயிற்சி செய்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு 4 முட்டை சாப்பிடலாம்.

ஆனால் கணிணி முன் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடக் கூடாது.

முட்டையை தரமானதாக இருந்தால் பச்சையாக சாப்பிடலாம். அதைவிட வேக வைத்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் இருமடங்கு கிடைக்கும்.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

இதய நோய் மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் மட்டும் முட்டையை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு

முட்டையை அதிக நேரம் வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடக் கூடாது. ஆனால் காய்கறிகளை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். மேலும் இது போன்ற தகவலுக்கு முத்தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: