இந்த நடிகை 5 நிமிடத்திற்கு 5 கோடி வாங்கியிருக்கிறாராம்! அவரோட ரேட் றொம்ப அதிகமாம்!
பாலிவுட் பிரபல நடிகைகள் என்றால் ஞாபகம் வரும் முகங்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் தமிழில் விஜய்யுடன் ஒரு படமும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் தான் லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டது அதில் பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்தார்.
ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விரைவில், தாய்நாடான இந்தியாவிற்கு திரும்ப உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் தற்போது மும்பையில் 19ம் திகதி நடக்கவிருக்கும் விருது விழாவில் நடனம் ஆட கமிட்டாகியுள்ளார். வெறும் 5 நிமிடங்கள் நடனம் ஆட இவர் 5 கோடி ருபாய் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![இந்த நடிகை 5 நிமிடத்திற்கு 5 கோடி வாங்கியிருக்கிறாராம்! அவரோட ரேட் றொம்ப அதிகமாம்!](https://tamilpiththan.com/wp-content/uploads/2017/12/rs_1024x759-170119082211-1024.Priyanka-Chopra-Peoples-Choice.jl_.011917-300x222.jpg)