இந்த ஆண்டின் இறுதிக்குள் தனுசு ராசிக்கும் அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் என்ன?

0

தனுசு ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது சொத்து ரீதியான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வருமானம் பெருகி செல்வ சேர்க்கை உண்டாவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். கடின முயற்சி மற்றும் நேர்மையான குணம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு எளிதாக அமையும்.

உங்களுடைய தொடர் முயற்சிகள் பணி சுமையை ஏற்படுத்தும் என்பதால் எப்போதும் ஒருவித மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்களுடைய குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள்.

புதிய புதிய விஷயங்களை உட்புகுத்துவதன் மூலம் நல்ல பல மாற்றங்களை உணர முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களை பொறுத்தவரை உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இதனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன் தரும்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு தனுசு ராசிக்காரர்களுக்கு ஓரளவு சுமாரான பலன்களே கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல் தொடர்பானவற்றில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது மிகவும் நல்லது. பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம்.

பண விஷயத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலகட்டமாக அமைய இருக்கிறது. சிக்கனத்தின் பெருமைகளை உணர்வீர்கள்.

குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தேவையான நேரத்தில் நண்பர்கள் தான் உதவுவார்கள்.

வருகின்ற குரு பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கி நல்ல ஒற்றுமை மேம்படும்.

கணவன் மனைவி உறவுக்கு இடையே தேவையற்ற நபர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

தனுசு ராசியினர் இந்த குரு பெயர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்களை தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் படிப்படியாக நீங்கும்.

தினமும் யோகா தியானம் போன்ற ஏதாவது ஒன்றை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும்.

பரிகாரம்:

வியாழன் கிழமை அன்று குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க யோகம் உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇது தெரிந்தால் இனி வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க ஏன் தெரியுமா?
Next articleகுபேரனின் பார்வை உங்க பக்கம் திரும்பி செல்வம் வந்து சேர! இவற்றையெல்லாம் செய்தால் போதும்!