இந்திய பிரஜைக்கு வருமானம் எங்கிருந்து வந்தது? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சதித்திட்டம்!

0
206

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட இந்திய பிரஜை எவ்வித வருமானம் இன்றி இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோரை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த தகவலை வெளியிட்ட இந்திய பிரஜை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித வருமான வழியும் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமையின் மர்மம் புரியவில்லை என அமைச்சர் மத்தும பண்டார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த இந்திய பிரஜை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நபர் பழகிய நபர்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக இந்தியாவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: