இந்திய திரை: நடிகர் அர்ஜுன் மனைவியை பிரிந்தது ஏன்?

0
284

இந்திய திரை உலகின் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் தனது மனைவி மெஹர் ஜெசியா இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை நிலவி வந்தது கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி இருபது (20) வருடங்கள் ஆகின்றன. தற்போது இவர்கள் இருவரும் பிரிவதாக சேர்ந்து தங்களது முடிவை அறிவித்துள்ளனர்.

அர்ஜுன் ராம்பல் மற்றும் மெஹர் ஜெசியாவுக்கு மஹிகா, மயிரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி இருபது (20) ஆண்டுகள் முடிந்த நிலையில் இத்தம்பதியினர் பிரிந்துவிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. நாங்கள் உறவால் பிரிந்துவிட்டாலும் எங்கள் இருவரின் குழந்தைகளின் நலனில் அக்கறையாக இருப்போம். அவர்களுக்கான விஷயங்களில் சேர்ந்து முடிவு எடுப்போம், எஙக்ளுடைய திருமண உறவு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர எங்களிட உள்ள “அன்பு” அல்ல என்று மெஹர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தினால் தான் அவரின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு அது தர்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது என்றும் பாலிவுட் மீடியா கூறுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: