மே.இ.தீவுகளுக்கு எதிராக பிரபல ‘டை’யில் முடிந்த 2வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு இந்திய அணி புனே செல்வதற்காக 2 பேருந்துகளில் விமான நிலையம் வந்தது.
ஆனால் விசாகப்பட்டிணம் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கேண்டீன் ஊழியர் ஒருவர் விசாகப்பட்டிணம் விமான நிலைய லவுஞ்சில் தாக்குதல் நடத்தியது பரபரப்பானது. இதனையடுத்து விமானநிலையத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது, வருவோர் போவோர் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இந்தச் சமயத்தில் இந்திய அணி புனே விமானத்தில் புறப்பட விசாக விமான நிலையத்துக்கு வந்த போது பேருந்திலேயே விமனாநிலையத்துக்கு வெளியே காத்திருக்க நேரிட்டது.
பதற்றமான சூழல் கட்டுக்குள் வந்த பிறகே இந்திய அணி விமானத்தைப் பிடிக்க முடிந்தது.
நாளை (சனிக்கிழமை) புனேயில் இந்தியா-மே.இ.தீவுகள் 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.