இந்தியாவில் முதல் முறை பல தடைகளைத் தாண்டி சாதித்த திருநங்கை மருந்தாளர்! பின்னணியில் இவ்வளவு சோகமா!

0
369

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான லயோலா கல்லூரியின் மாணவர் அமைப்பான லயோலா மாணவர் பேரவைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் துணைச் செயலராக நலீனா பிரஷீதா (25) என்ற திருநங்கை தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

லயோலா மாணவர் பேரவைக்கு 2019-2010ஆம் வருட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நலீனா பரஷீதா, துணைச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

நலீனாவின் சொந்த ஊர் திண்டுக்கல். சிறுவயதிலிருந்தே தன்னைப் பெண்ணாக உணர்ந்த நலீனா, 11ஆம் வகுப்புப் படிக்கும்போதே, தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள முடிவுசெய்தார்.

ஆனால், வீட்டில் இருந்தவர்கள் ஏற்காதேோலக நிலையில், வீட்டைவிட்டு வெளியேறினார். பால் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். பள்ளிப் படிப்பும் பாதியில் நின்றுபோனது. இதற்குப் பிறகு வெளியிலிருந்து 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற நலீனா, லயோலாவில் இளமறிவியல் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தார்.

விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் இளமறிவியல் முடித்த பிறகு, மீண்டும் லயோலாவிலேயே மூதறிவியல் படிப்பில் சேர்ந்த நலீனா, தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். லயோலா கல்லூரியில் இதற்கு முன்பாகவே ஒரு திருநங்கை சேர்க்கப்பட்டிருந்தார் என்றாலும் அவர் தனது படிப்பைத் தொடரவில்லை. ஆகவே, நலீனாதான் லயோலாவின் முதல் திருநங்கை பட்டதாரியும்கூட. அந்த ஆண்டின் சிறந்த மாணவியாகவும் அவர் தேர்வுசெய்யப்பட்டார்.

தடைகளைத் தாண்டி சாதித்த திருநங்கை மருந்தாளர்
இதற்கு முன்பாகவே 2017ஆம் ஆண்டில் நடக்கவிருந்த தேர்தலில் போட்டியிட முயன்றார் நலீனா. “அந்த சமயத்தில் பலரும் இந்தப் போட்டி வேண்டாமென்றார்கள். ஒரு ஓட்டு கிடைத்தால்கூட போட்டியிடுவது என உறுதியாக இருந்தேன். அந்தத் தேர்தல் வேறு காரணங்களால் நின்று போனது. ஆகவே இந்த முறை போட்டியிட்டேன்” என்கிறார் நலீனா.

லயோலா மாணவர் பேரவையில் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர் என ஐந்து பொறுப்புகள் உண்டு. இதில் துணைச் செயலாளர் பதவி பெண்களுக்கானது. இந்தப் பதவிக்கான வாக்குகளையும் பெண் வாக்காளர்கள் மட்டுமே பதிவுசெய்ய முடியும். அந்தப் பதவிக்கான தேர்தலில்தான் 320 வாக்குகள் வித்தியாசத்தில் நலீனா வெற்றிபெற்றிருக்கிறார்.

“உண்மையில் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்பினேன். ஆனால், மாணவர்கள் கேட்டுக்கொண்டதால் துணைத் தலைவர் பதவியில் போட்டியிட்டேன். பிரச்சாரத்தின்போது, நான் திருநங்கை என அனுதாபம் தேடி வெற்றிபெற நினைப்பதாகவெல்லாம் சொன்னார்கள். ஆனால், அது உண்மையில்லை என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள்” என்கிறார் நலீனா.

படித்து முடித்து பிறகு ஒரு குடிமைப் பணி அதிகாரியாகவோ ஊடகத் துறையில் சாதிக்கவோ விரும்புகிறார் நலீனா.

இந்தத் தேர்தலுக்கான பணிகள் ஜூன் 18ஆம் தேதி துவங்கி, நடைபெற்றன. மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். வாக்குகள் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட்டன. வாக்குப் பதிவு முடிந்தவுடன் அன்றைய தினமே முடிவுகள் கல்லூரி முதல்வரால் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் பி.காம் படிக்கும் ஜங்கு ஜிஷ்னு தலைவராகவும் ஃபிலிப் சேவியர் என்ற மாணவர் துணைத் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். மாணவிகள் அனைவரையும் துணைச் செயலர் என்ற பொறுப்பிலிருந்தபடி, நலீனா பிரஷீதா பிரதிநிதித்துவம் செய்வார்.

“இந்தத் தேர்தலின்போது நானாக வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை. ஆனால், மாணவிகளுக்கு ஏதாவது தேவையா என்று கேட்டேன். அவர்கள் தங்களுக்கென கால்பந்தாட்ட அணி வேண்டுமனக் கூறினார்கள். அதற்கு நிச்சயம் முயற்சி செய்வேன்.

அதேபோல, கைப்பந்து, கிரிக்கெட் அணிகளையும் உருவாக்க முயற்சிப்போம். மேலும் சைபர் செக்யூரிட்டி, மாணவிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடு போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் நலீனா.

இதேவேளை, திருநங்கை ஒருவர் மாணவர் சங்க நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. அதுமாத்திரம் அல்ல, தற்போது லயோலா கல்லூரியில் நலீனா தவிர மேலும் இரண்டு திருநங்கை மாணவிகள் படித்துவருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் கண்களில் இந்த பிரச்சனைகள் உள்ளதா! உடனே கவனியுங்கள்! இல்லையெனில் பார்வை பாதிக்கும் அபாயம்!
Next articleதாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து தெருவில் ஊர்வலம் நடத்திய கும்பல்! அதிர்ச்சி காரணம்!